Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு- லோக்சபாவில் கறுப்பு உடையுடன் திமுக, இடதுசாரி எம்பிக்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து லோக்சபாவில் கறுப்பு உடை அணிந்து திமுக எம்.பிக்கள் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி தொடர்பான விமர்சன வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. மேலும் ராகுல் காந்தி வென்ற, வயநாடு லோக்சபா தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழ்நாடு சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கறுப்பு உடை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Parliament: DMK MPs wearing black dress to protest against disqualification of Rahul Gandhi

இதேபோல் ராகுல் எம்பி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லோக்சபாவில் திமுக எம்பிக்கள் கறுப்பு உடை அணிந்து பங்கேற்றனர். மேலும் ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பு தொடர்பாக விவாதிக்க கோரி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

திருமாளவன் எம்பி நோட்டீஸ்

ராகுல் காந்தி பதவி பறிப்பு குறித்து ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்ததாக விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாளவன் தமது ட்விட்டர் பக்கத்தில், ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் வரலாற்றில் கிரிமினல் அவதூறு வழக்கில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும். திரு ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கும் ஆளும் கட்சியின் எண்ணம் இதில் தெளிவாகத் தெரிகிறது. எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது, கீழமை நீதிமன்றங்களில் அரசு தலையிடுவதை இது வெளிப்படுத்துகிறது. இந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை விவாதிக்க சபையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளோம் என கூறியுள்ளார்.

Parliament: DMK MPs wearing black dress to protest against disqualification of Rahul Gandhi

தேசமே கேட்கிறது...

கறுப்பு உடை அணிந்து நாடாளுமன்றத்தில் பங்கேற்றது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்பி பதிவிட்டுள்ளதாவது:

கருப்பு சட்டை

தேசமே கேட்கிறது...
பிரதமரே!
உங்கள் அருமை நண்பர்
அதானிக்காக
ஒரு நாடாளுமன்ற கூட்டத் தொடரே அர்ப்பணமா?

நாடாளுமன்ற குழு
விசாரணைக் கூண்டில்
அதானி நிற்பதில்
உங்கள் கால்கள் வலிப்பது ஏன்?

Parliament: DMK MPs wearing black dress to protest against disqualification of Rahul Gandhi

ங்கள் கை வைத்திருப்பது
ராகுல் காந்தி மீது அல்ல
இந்திய ஜனநாயகத்தின் மீது...

அதானி மீது ஒரு துரும்பு கூட படாமல் பாதுகாக்கும்
'கூட்டுக் களவை'
அறிவார்கள் மக்கள்!

தகுதி நீக்கம் என்ற பெயரில் நடக்கும்
உரிமை நீக்கத்தை
அனுமதிக்கமாட்டோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+