‛தீவிரவாதி’.. நாடாளுமன்றம் என்ன சொற்களின் குப்பை தொட்டியா? பாஜக எம்பியால் கொதித்த வைரமுத்து
டெல்லி: பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் தீவிரவாதி என பாஜக எம்பி ரமேஷ் பிதுரி விமர்சனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இத்தகைய சூழலில் தான் கவிதை நடையில் பாஜக எம்பி ரமேஷ் பிதுரியின் செயலுக்கு கவிஞர் வைரமுத்து கண்சிவந்து கொதித்துபோய் உள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18 ம் தேதி தொடங்கியது. நாடாளமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா என்பது இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 5 நாட்கள் சிறப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில் மசோத பிரச்சனையின்றி நிறைவேறியதால் ஒரு நாளுக்கு முன்பே முடித்து கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தான் கடைசி நாளான கடந்த 21ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் (லோக்சபா) சந்திரயான்-3 வெற்றி தொடர்பான விவாதம் நடந்தது. இதில் ஒவ்வொரு கட்சி எம்பிக்களும் பங்கேற்று பேசினார். மேலும் மத்திய அரசு, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த வேளையில் டெல்லி தெற்கு நாடாளுமன்ற தொகுதி பாஜக எம்பியான ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். டேனிஷ் அலியை பார்த்து அவர் தீவிரவாதி என கூறியதோடு இழிவுப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தி அட்டாக் செய்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‛இந்தியா' எம்பிக்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதினர். மேலும் பாஜக சார்பிலும் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டேனிஷ் அலி எம்பியை மதரீதியாக பாஜக எம்பி விமர்சித்ததற்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஒரு நாற்சந்திப் பேச்சாளருக்கும்
நாடாளுமன்ற உறுப்பினருக்கும்
சொல்லாட்சியில் வேறுபாடு இருக்கிறது
நாடாளுமன்றம் என்பது
பளபளப்பான
கற்களால் கட்டப்பட்ட
சொற்களின் குப்பைத்தொட்டியல்ல
நாட்டின் உரிமைக்குரலும்
பண்பாட்டின் பெருமைக்குரலும்
தெறித்துக் கிளம்பும் திருத்தலம்
அவையல் கிளவிகளை
எவர் மொழிந்தாலும்
எவர்மீது பொழிந்தாலும்
அவரை அவைத்தலைவர்
ஒறுத்து ஒதுக்க வேண்டும்
நாடு உங்களை கவனிக்கிறது;
நாட்டை உலகம் கவனிக்கிறது'' என சாடியுள்ளார்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
"இனி யாரோடு பாடுவேன்? பாரதிராஜாவை சிரிக்க வைத்த வீடியோவை பகிர்ந்து உருகிய வைரமுத்து!" ரசிகர்கள் ஆறுதல் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
"எங்கே பாரதிராஜா? இனி நான் என்ன பதில் சொல்வேன்?” கதறிய வைரமுத்து... கண்கலங்க வைத்த இறுதி மரியாதை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்












Click it and Unblock the Notifications