5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.
Recommended Video

டெல்லி: இந்திய அரசியல் களமே சூடுபிடித்து கிடக்கும் இந்த நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடியது. பின்னர், மறைந்த மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின்னர் நாள் முழுவதும் கூட்டத்தொடர் ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
5 மாநில தேர்தல் முடிவுகள் ஒருபுறம் எண்ணப்பட்டு வருகிறது. இந்தநிலையில்தான் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. தேர்தலில் பாஜக தோல்வி முகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விவாதிப்பதற்கும், அலசுவதற்கும், ஆராய்வதற்கும், எக்கச்சக்க விவகாரங்களை எதிர்க்கட்சிகள் கையில் ரெடியாக வைத்திருக்கின்றன.

விவாதங்கள்
ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட ஏகப்பட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் இன்று எழுப்ப பிளான் செய்திருக்கின்றன. அதனால் பார்லிமென்டில் அனல் தெறிக்கும் விவாதங்கள் இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 8
20 அமர்வுகள் இந்த கூட்டம் நடக்க போகிறது. ஒவ்வொரு அமர்வுமே உச்சக்கட்ட பரபரப்பாகதான் இருக்க போகிறது. அந்த அளவுக்கு கையில் விவகாரங்களை வைத்திருக்கின்றன எதிர்கட்சிகள். ஜனவரி 8-ம் தேதிதான் இந்த கூட்டத்தொடர் முடிவடைய போகிறது.

மனித உரிமைகள்
அதுவரை கூட்டத்தொடரில் பேச 23 மசோதாக்களை பரிசீலனைக்கு எடுத்து கொள்ள முடிவாகி உள்ளது. அதாவது முத்தலாக் தடை சட்டத்துக்கு மாற்றான மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மனித உரிமைகள் பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவைகள் எடுத்துகொள்ளப்பட இருக்கின்றன.

காங்கிரஸ்
அதே நேரத்தில் 20 புதிய மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. கூடவே 2 மசோதாக்களை திரும்ப பெறப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எப்படி பார்த்தாலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை காங்கிரஸ் கண்டிப்பாக இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும்.

ராமர் கோயில்
இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்தாலும், ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழலையும், ராமர் கோயில் கட்டுவது தொடர்பான விவகாரத்தையும் எழுப்பாமல் இந்த கூட்டத்தொடர் முடியபோவதில்லை.

பஞ்சமே இருக்காது
அதனால் காரசார விவாதங்களுக்கும், அனல்தெறிக்கும் வாக்குவாதங்களுக்கும் இந்த கூட்டத்தொடரில் ஒரு பஞ்சமும் இருக்காது என்றே தோன்றுகிறது.

இரங்கல்
அதன்படி இன்று காலை அவை கூடியது. அப்போது கூட்டத்தொடரில் மறைந்த பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாள் முழுவதும் அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications