Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டார்கெட் அமித்ஷா.. கனிமொழி, ஜோதிமணி, சு வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்பட 14 எம்பிக்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபாவில் சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி திமுக எம்பி கனிமொழி, கரூர் எம்பி ஜோதிமணி, மதுரை எம்பி சு வெங்கடேசன், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் உள்பட 7 தமிழக எம்பிக்களோடு சேர்த்து மொத்தம் 14 எம்பிக்கள் மீதமுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வுருகிறது. இந்நிலையில் தான் நேற்று லோக்சபாவில் 2 பேர் நுழைந்து ஸ்பிரே அடித்தனர். இதனால் லோக்சபா மஞ்சள் நிற புகையால் சூழ்ந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நாடாளுமன்றத்துக்கு வெளியேவும் பெண் உள்பட 2 பேர் ஸ்பிரே அடித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

 Parliament Security Breach: 14 Loksabha MP including Tamilnadus DMK MPs Kanimozhi and Congress Jothimani

நாடாளுமன்ற கூட்டத்தொடரை சீர்குலைக்கும் இந்த செயலில் மொத்தம் 6 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 4 பேர் உடனடியாக கைதான நிலையில் இன்னொருவரையும் டெல்லி போலீசார் தட்டித்தூக்கினர். இன்னும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதற்கிடையே தான் இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதோடு நாடாளுமன்றத்தில் போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காதது தான் இதற்கு காரணம். இது எம்பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து லோக்சபா, ராஜ்யசபாவில் விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் இன்று வலியுறுத்தி வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவம் குறித்து இரு சபைகளிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இதனால் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் தொடங்கியவுடன் லோக்சபா, ராஜ்யசபாவில் இந்த கோரிக்கையை எம்பிக்கள் முன்வைத்தனர். இதனால் கடும் அமளி ஏற்பட்டது. லோக்சபாவில் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதையடுத்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு 2 மணிக்கு மீண்டும் லோக்சபா தொடங்கியது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தாமாக முன்வந்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‛‛பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான விஷயத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. ஆனால் இங்கு சிலர் அரசியல் செய்கின்றனர். நாடாளுமன்றத்தில் இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. பல முறை இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. 1974ம் ஆண்டு ஏப்ரல் மாதம் , நவம்பர் 1999 ம் ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக அனைத்து உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தி பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இது அமல்படுத்தப்படும். இந்த விஷயத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்'' என்றார்.

இருப்பினும் காங்கிரஸ் எம்பிக்கள் கேட்கவில்லை. இதையடுத்து லோக்சபாவில் சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியின் 5 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் . மற்ற 4 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.

அதன்படி கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, கேரள மாநிலம் இடுக்கி தொகுதி எம்பி டீன் குரியகோஸ், எர்ணாகுளம் தொகுதி எம்பி ஹிபி ஈடன், ஆலத்தூர் தொகுதி எம்பி ரம்யா ஹரிதாஸ், திருச்சூர் தொகுதி எம்பி டிஎன் பிரதாபன் உள்ளிட்டவர்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவை சபாநாயகர் ஓம்பிர்லா பிறப்பித்தார்.

அதன்பிறகு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்பிக்கள் கோஷம் எழுப்பினர். இதைடுத்து சிறிது நேரம் சபை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மதியம் 3 மணிக்கு மீண்டும் சபை தொடங்கியது. இதையடுத்து சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி 9 எம்பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதன்படி தமிழ்நாட்டில் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி, சேலம் திமுக எம்பி எஸ்ஆர் பார்த்திபன், விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்பி சு வெங்கடேசன், கோவை எம்பி பிஆர் நடராஜன் உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர கே சுப்பிரமணியம் எம்பி, கேரளா மாநிலம் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்பி விகே ஸ்ரீகண்டன், சாளக்குடி தொகுதி காங்கிரஸ் எம்பி பென்னி பென், பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் தொகுதி காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத் என மொத்தம் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி வாரியா பார்த்தால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுகவை சேர்ந்த தலா 2 எம்பிக்கள், சிபிஐ கட்சியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக இந்த விவகாரத்தில் ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓபிரையன் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+