அப்பனே! கணேசா! விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய நாடாளுமன்றத்துக்கு குடியேறும் 'இந்தியா எனும் பாரத்'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 19-ந் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் லோகபா, ராஜ்யசபா அமர்வுகளை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கூட்டப்படுவதற்கு முன்னதாக, சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளது மத்தியில் ஆளும் பாஜக. ஆனால் சிறப்பு கூட்டத் தொடரில் எதை விவாதிக்கப் போகிறோம் என்பதை இன்னமும் மத்தியில் ஆளும் பாஜக அரசு தெரிவிக்கவில்லை. இது மிகப் பெரும் சர்ச்சையாக நீடித்து வருகிறது.

Parliament special session to be held in new building from Sep.19

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். இதேபோல எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தின் அஜெண்டாதான் என்ன என கேள்வி கேட்கின்றனர். ஆனால் மத்திய அரசு மவுனமாக இருந்து வருகிறது.

இதனால் ஒரே நாடு ஒரே சட்டம், பொது சிவில் சட்டம், மகளிர் இடஒதுக்கீடு ஆகிய மசோதாக்களை ஒரே மூச்சாக சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு நிறைவேற்றும் என யூகங்கள் கிளம்பி உள்ளன. இதனை ஒட்டி பல்வேறு விவாதங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. இதனால் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகமாவது உறுதியாகி உள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டமானது 5 அமர்வுகளாக நடைபெறும். இதில் கேள்வி பதில்களும் இடம்பெறாதாம்.

இன்னொரு பக்கம், இந்தியாவின் பெயரை "பாரத்" என மாற்ற மத்திய அரசு திட்டமிடிருக்கிறது; இதற்கான தீர்மானத்தையும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரப் போகிற என்கிற யூகமும் ரெக்கை கட்டிப் பறக்கிறது. ஆனால் இது வதந்தி என மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறக் கூடும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தின் முதல் நாள் பழைய கட்டிடத்தில் நடைபெறுமாம். அதற்கு அடுத்த மறுநாள் விநாயகர் சதுர்த்தி நாளில் செப்டம்பர் 11-ந் தேதியன்று புதிய நாடாளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் குடியேறப் போகிறார்களாம்.

அப்பனேகணேசா! அமளி இல்லாம பார்த்துக்கப்பா!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+