அலறிய ‛ஐபோன்’.. பதறிய எதிர்க்கட்சி தலைவர்கள்! ஆப்பிள் அதிகாரிகளுக்கு பறக்கும் சம்மன்? பரபர தகவல்
டெல்லி:‛ஆப்பிள்' ஐபோன்களுக்கு சென்ற ‛அலர்ட்' மெசேஜால் மத்திய அரசு எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போனை ஹேக் செய்து உளவு பார்க்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் ‛ஆப்பிள்' அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப பரிசீலனை செய்வதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை உளவு பார்ப்பது, அவர்களின் பேச்சுக்களை ஒட்டுகேட்பது என பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்தியா உள்பட பல நாடுகளில் ஆளும் கட்சியால் அவ்வப்போது வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு இந்தியாவில் ‛பெகாசஸ்' மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக பிரதமர் மோடி அரசு மீது குற்றச்சாட்டப்பட்டது.
இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது இன்னொரு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளில் உள்ள தலைவர்களின் ‛ஆப்பிள்' ஐபோன்களுக்கு ‛அலர்ட்' மெசேஜ் ஒன்று சென்றது.
அந்த மெசேஜில் ‛‛'ஸ்டேட் ஸ்பான்சர்டு அட்டாக்கர்ஸ்' மூலம் உங்கள் செல்போன் குறிவைக்கப்படுகிறது. உங்களின் ஐபோனை வேறு இடத்தில் இருந்து இயக்க முயற்சிக்கிறார்கள்.அரசு உதவியுடன் இயங்கும் இந்த ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டால், அதன் பின் எங்கிருந்தும் ஐபோனையும், அதில் உள்ள தகவல்களையும் பயன்படுத்த முடியும். இது தவறான அலர்ட்டாக கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. கவனமாக இருங்கள்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அலர்ட் மெசேஜ் என்பது காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் சசிதரூர், பவன் கேரா, கேசி வேணுகோபால், சுப்ரியா ஸ்ரீநாத், டிஎஸ் சிங்டியோ, பூபிந்தர் சிங் ஹூடா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், சிவசேனா (உத்தவ் அணி) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம்ஆத்மி கட்சியின் எம்பி ராகவ் சதா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ராகுல் காந்தியின் சில உதவியாளர்களுக்கு சென்றுள்ளது.
இதையடுத்து மத்திய பாஜக அரசு தங்களை உளவு பார்த்து, ஒட்டுகேட்க முயற்சிப்பதாகவும், செல்போன் தகவல்களை திருட முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை மத்திய அரசும் மறுத்துள்ளது. இதுபற்றி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‛‛இந்த பிரச்சினையில் மத்திய அரசு அக்கறையோடு செயல்படுகிறது. விசாரணை நடத்த உள்ளது. விசாரணைக் ஒத்துழைக்குஆப்பிள் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது'' என்றார்.

இந்நிலையில் தான் இந்த அலர்ட் மெசேஜ் தொடர்பாக தகவல் தொழில்நுட்ப பிரிவின் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையை தொடங்க இருக்கிறது. இதற்காக ‛ஆப்பிள்' நிறுவன அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்புவது தொடர்பாக அந்த நிலைக்குழு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் ‛ஆப்பிள்' நிறுவனத்தின் ‛அலர்ட்' மெசேஜ் அரசியலில் புயலை கிளப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications