12 எம்பிக்கள் சஸ்பெண்ட்: 4 கட்சிகளை அழைத்த சபாநாயகர்.. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு-இன்று என்ன நடக்கும்
டெல்லி: 12 எம்பிக்கள் ராஜ்ய சபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படாத வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக இந்த கூட்டத்தொடரில் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் ராஜ்ய சபா சபாநாயகர் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி மற்றும் அனில் தேசாய், திரிணாமுல் காங்கிரஸின் டோலா சென் மற்றும் சாந்தா சேத்ரி, சிபிஎம்மின் இளமாறன் கரீம் ஆகியோர் உட்பட 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரசில் மட்டும் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 14 எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிராக கடந்த மாதம் 29ம் தேதியில் இருந்து கடுமையாக போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் இரண்டு அவைகளும் முடங்கின. இந்த நிலையில் போராட்டத்தை கைவிடும் விதமாக திரிணாமூல், சிவசேனா, சிபிஐ, சிபிஎம் ஆகிய நான்கு கட்சி உறுப்பினர்களை மட்டும் ராஜ்ய சபா சபாநாயகர் வெங்கையா நாயுடு அழைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 14 எதிர்க்கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும். 4 எதிர்கட்சிகளை மட்டும் அழைப்பது சரியில்லை. பேச்சுவார்த்தைக்கு முன்பாக முதலில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலில் கூறியுள்ளன. எனவே இந்த மீட்டிங் நடக்க வாய்ப்பு இல்லை.
இதனால் இன்றும் அவையில் இது தொடர்பான விவாதங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும் அவையில் அமளி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் என்னன்னே மசோதாக்கள் நடக்கும், என்ன வாதங்கள் நடக்கும் என்று பார்க்கலாம்.
லோக்சபா
ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு இன்று அவையில் கொண்டு வர உள்ளது. இதற்கான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று மக்களவையில், மக்களிடம் இருந்து வரிப்பணத்தை வாங்கும் Consolidated Fund of India அமைப்பில் சில அடிப்படை மாற்றங்களை செய்யும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதா தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல் விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனைகளை இன்று எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளது.
அதேபோல் காலநிலை மாற்றம் குறித்து இன்று அவையில் விவாதிக்கப்பட உள்ளது.
ராஜ்யசபா
இன்று மாநிலங்களவையில், மத்திய அமைச்சர் கிரேன் ரிஜ்ஜு சார்பாக இடைதரர்களை கண்காணிக்கும் சட்ட மசோதா கொண்டு வரப்பட உள்ளது.
இன்று மக்களவையில் தேசிய அளவிலான ஊக்கமருந்து தடுப்பு அமைப்பை உருவாக்கும் மசோதா அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கொரோனா- ஓமிக்ரான் தொடர்பான விவாதம் நடக்க உள்ளது.
-
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications