நாடாளுமன்றத்தில் இன்று: மாநிலங்களவையில் தாக்கலாகிறது செயற்கை முறை கருத்தரித்தல் மசோதா
டெல்லி: செயற்கை முறை கருத்தரித்தல் ஒழுங்குமுறை மற்றும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) ஆகிய இரு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையில் தாக்கலாகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. விவசாயிகளின் உயிர்களை காவு வாங்கிவிட்டு, அவர்களை துயரத்துக்குள்ளாக்கிவிட்டுத்தான் இந்த மசோதாவை ரத்து செய்ய வேண்டுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
மேலும ஓராண்டு போராட்டத்திற்கு பிறகு அந்த மசோதாவை ரத்து செய்தது ஏன் என்பது குறித்தும் விவாதம் இன்றி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முதல் நாளே அமளியில் ஈடுபட்டன.
அவை தொடங்கிய முதல் மூன்று 3 நாட்களாக அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதற்காக இந்த முறை 12 ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பாதியில் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம் இரு நாட்கள் கழித்து இன்று மீண்டும் கூடுகிறது. கடந்த 2ஆம் தேதி செயற்கை கருத்தரித்தல் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்தார். அது போல் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த செயற்கை கருத்தரித்தல் மசோதா படி இனி அனைத்து கருத்தரிப்பு சிகிச்சை மையங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். கருமுட்டைகள், விந்தணுக்கள் தானம் செய்வோருக்கான அடிப்படை தகுதி, அவர்கள் எத்தனை முறை தானம் வழங்கலாம் போன்றவைகளும் இந்த மசோதாவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த இரு மசோதாக்களும் இன்று ராஜ்யசபாவில் தாக்கலாகிறது.
ராஜ்யசபா:
செயற்கை முறை கருத்தரித்தல் ஒழுங்குமுறை மற்றும் வாடகைத் தாய் (ஒழுங்குமுறை) ஆகிய இரு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தாக்கல் செய்கிறார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் பேசுகிறார்.
அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபடலாம் என தெரிகிறது. இதனிடையே பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து இன்று அவையில் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து வியூகம் வகுப்பர் என தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications