நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 13வது நாள்: இன்று 2 அவைகளிலும் என்ன நடக்கும்?
டெல்லி: நேற்று மத்திய அரசின் மத்திய விஜிலன்ஸ் கமிஷன் சட்ட திருத்தம் ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக இருக்கும். அதோடு இவர்களின் பதவிக்காலத்தை மேலும் 3 வருடங்கள் வரை அதிகபட்சம் நீட்டிக்க முடியும்.
இந்த மசோதா ஏற்கனவே பைபாஸ் முறையில் குடியரசுத் தலைவர் மூலம் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. இந்த நிலையில்தான் நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரண்டு அவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

12 எம்பிக்கள் ராஜ்யசபாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இரண்டு அவையிலும் அமளியில் ஈடுப்பட்டன. இந்த நிலையில் இன்று இரண்டு அவையிலும் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்..
இன்றும் இரண்டு அவையிலும் இதனால் கூச்சல் குழப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை
இந்த நிலையில் இன்று ராஜ்ய சபாவில் மத்திய விஜிலன்ஸ் சட்ட திருத்த மசோதா தொடர்பான அறிக்கை ஒன்று அவையில் தாக்கல் செய்யப்படும். இன்று மக்களவையில், மக்களிடம் இருந்து வரிப்பணத்தை வாங்கும் Consolidated Fund of India அமைப்பில் சில அடிப்படை மாற்றங்களை செய்யும் வகையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மசோதா தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல் விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனைகளை இன்று எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளது.
அதேபோல் பல்லுயிரியல் சட்ட திருத்த மசோதா இன்று அவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மாநிலங்களவை
அதேபோல் மாநிலங்களவையில், போதை பொருள் தடுப்பு பிரிவு தொடர்பான சட்ட திருத்த மசோதா 2021 தாக்கல் செய்யப்பட உள்ளது. அதேபோல் மாநிலங்களவையில் ஓமிக்ரான் கொரோனா குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications