கயா விமான நிலையத்தை குறிப்பிடும் 'GAY' குறியீடை மாற்றணும்.. அரசுக்கு, நாடாளுமன்ற குழு பரிந்துரை!
டெல்லி; கயா விமான நிலைய குறியீட்டுக்கு பயன்படுத்தப்படும் 'GAY' குறியீட்டை மாற்ற வேண்டும் என்று அரசிடம், நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. புனித நகரமாக விளங்கும் கயாவுக்கு 'GAY' என்ற குறியீடு பொருத்தமற்றது என்று நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது.
நாட்டில் உள்ள ஒவ்வொரு விமான நிலையத்துக்கும் ஒரு குறியீட்டு சொல் உண்டு. உதாரணத்திற்கு சென்னை விமான நிலைய குறியீடு MAA ஆகும். இதேபோல் பெங்களூர் விமான நிலைய குறியீடு BLR ஆகும். விமான டிக்கெட் புக் செய்யும்போது நீங்கள் இதனை கவனித்திருக்கலாம்.

விமான நிலையத்தின் குறியீடு 'GAY'
பீகார் மாநிலத்தில் உள்ள கயா நாட்டின் புனித நகரமாக விளங்கி வருகிறது. புத்த மதத்தை நிறுவிய புத்தர் பெருமான் கயா நகரில் ஞானத்தை அடைந்தார். கயா நகரம் புத்த மதத்தினரிடையே மிகப் பிரபலமாக விளங்குகிறது. இதேபோல் பல்வேறு புகழ்பெற்ற இந்து கோவில்களும் இங்கு அமைந்துள்ளன. கயா(GAYA) விமான நிலையத்தின் குறியீடு 'GAY' ஆகும் .

மாற்ற வேண்டும்
இந்த குறியீட்டைதான் மாற்ற வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது. ஆண் ஓரின சேர்க்கையாளர்களை குறிப்பிட்ட 'GAY' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. எனவே புனித நகரில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்துக்கு 'GAY' என்ற குறியீடு இருப்பது பொருத்தமற்றது என்று நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது.

பொருத்தமற்றதாக உள்ளது
பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு, கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் அறிக்கையில், கயா விமான நிலையத்தின் குறியீட்டை ‘GAY' இலிருந்து மாற்ற பரிந்துரைத்தது மற்றும் ‘YAG' போன்ற மாற்று குறியீட்டு பெயரையும் பரிந்துரைத்தது. கயா ஒரு புனித நகரம் என்பதைக் கருத்தில் கொண்டு குறியீட்டு பெயர் பொருத்தமற்றதாகவும், , புண்படுத்தும் மற்றும் சங்கடமானதாகவும் தோன்றியதாக அந்த குழு அறிக்கையில் கூறியுள்ளது.
Recommended Video

காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும்
கயா விமான நிலையத்தின் குறியீட்டு பெயரை மாற்றுவது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பெற்ற கோரிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டதாக குழு குறிப்பிட்டுள்ளது. கயா விமான நிலையத்தின் குறியீட்டுப் பெயரை மாற்றுவதற்குத் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் சம்பிரதாயங்களையும் காலக்கெடுவிற்குள் முடிக்குமாறும் அரசுக்கும், சிவில் விமான அமைச்சகத்துக்கும் நாடாளுமன்றக் குழு குழு பரிந்துரைத்துள்ளது.












Click it and Unblock the Notifications