Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்பு வாரிய மசோதா நிறைவேற்றம்.. சோனியா காந்தி கடும் எதிர்ப்பு.. காங்கிரசின் அடுத்த மூவ் இதுதானாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற லோக்சபாவில் நள்ளிரவு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சோனியா காந்தி இன்று அக்கட்சியின் பொதுக்குழுவில் இது தொடர்பாக பேசியிருக்கிறார். மேலும் அடுத்த கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவையும் கடுமையாக காங்கிரஸ் எதிர்க்கும் என்பதையும் தெரிவித்துள்ளார்.

வக்பு வாரியத்திற்கு சொந்தமாக பல லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய், மசூதி பராமரிப்பு, முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு செலவிடப்படுகிறது.

passage-of-waqf-board-bill-sonia-gandhi-strongly-opposes-says-congress-will-oppose-one-nation-one

வக்பு வாரிய மசோதா

இந்த சொத்துகளை முறைப்படுத்த கடந்த 1954 ஆம் ஆண்டு வக்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் பல்வேறு திருத்தங்களுடன் 1995 ஆம் ஆண்டு புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வக்பு வாரிய சொத்துகள் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக, 1995 ஆம் ஆண்டு சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்து மசோதா தயாரித்தது.

இந்த திருத்த மசோதா கடந்த ஆகஸ்டு மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு சென்றது. இதில் மசோதா மீது ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டன. அந்த திருத்தங்களுக்கு மத்திய கேபினட் அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. 12 மணி நேரங்களுக்கும் மேலாக தொடர் விவாதம் நடைபெற்ற நிலையில், மசோதா மீது வாக்கெடுப்பு நள்ளிரவு 2 மணியளவில் நடைபெற்றது.

சோனியா காந்தி கருத்து

இந்த மசோதாவிற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்ததால் லோக்சபாவில் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. லோக்சபாவில் நிறைவேறிய நிலையில், ராஜ்யசபாவில் இந்த சட்ட திருத்த மசோதா இனி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கிடையே வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான சோனியா காந்தி, வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, வக்பு வாரிய மசோதா லோக்சபாவில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பாஜகவின் சதி இது எனவும் கூறியிருக்கிறார்.

அரசியல் அமைப்பை அழிப்பதுதான் நோக்கம்

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கும் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவிக்கும் எனக் கூறியுள்ள சோனியா காந்தி, அரசியல் அமைப்பை தகர்க்கும் மற்றொரு முயற்சி இதுவாகும் என்று கூறியிருக்கிறார். நாட்டை படுகுழியில் மோடி அரசு இழுத்து செல்கிறது. அங்கு அரசியல் அமைப்பு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அரசியல் அமைப்பை அழிப்பதுதான் அவர்களது நோக்கம் ஆகும் எனவும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார் சோனியா காந்தி. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனையில் உள்ளது.

மழைக்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தான், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கும் காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக சோனியா காந்தி கூறுகையில், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியல் அமைப்பை நசுக்கும் மற்றொரு செயலாகும். இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+