75 வருடங்களாக இலவசமாகவே ஓடும் ரயில்.. இந்தியாவில் தாங்க.. எந்த ரூட்டில் என்று தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக எந்தவித டிக்கெட் கட்டணமும் இன்றி எப்போதும் பயணிகள் இலவசமாக பயணிக்கும் வகையில் ரயில் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.. ஆம்.. இமாச்சல் பிரதேசத்தில் இப்படி கட்டணம் இன்றி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில், சுற்றுலாப் பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களும் அதிக அளவில் பயணித்து வருகிறார்கள்.
ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்தால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். பொது டிக்கெட்டை வைத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியில் ஏறினாலும் அபராதம் கட்டுவதோடு நடுவழியில் இறங்கி பொதுப்பெட்டிக்கு மாற வேண்டியிருக்கும். ரயில்களில் பயணிகள் டிக்கெட் எடுத்து பயணிக்கிறார்களா? என்பதை அவ்வப்போது டிடிஆர்களும் உறுதி செய்கிறார்கள்.

டிக்கெட் கிடையாது: இதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.. இந்தியாவில் ஒரு ரயிலில் எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாக எப்போதும் பயணம் செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதாங்க.. இமாசல பிரதேசத்தில் உள்ள பகாரா - நங்கல் இடையே ஓடும் ரயில் தான் கட்டணம் இன்றி 75 வருடங்களாக இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1948 முதல்: 12 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த இரு பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் ஒரு ரயிலில் பயணிகள் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்தாமல் பயணிக்க முடியும். சட்லெஜ் ஆறு மற்றும் சிவாலிக் மலைகளை கடந்து இந்த ரயில் செல்கிறது. 12 கிலோ மீட்டர் தொலைவில் மொத்தம் 6 ரயில் நிலையங்கள் உள்ளன. பங்கரா - நங்கல் அணையை கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கலுக்காக கடந்த 1948-ல் இந்த ரயில் செவை தொடங்கப்பட்ட்து.
தினமும் 800 பேர் பயணம்: முதலில் நீராவி என்ஜின் கொண்ட ரயிலாக இந்த ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு காலத்திற்கு ஏற்ப பல்வேறு மாறுபாடுகளுடன் இந்த ரயில் இயங்கி வருகிறது. இமாசல பிரதேசத்தில் ஓடும் ரயிலில் தினந்தோறும் சுமார் 800 பயணிகள் பயணம் செய்கிறார்கள். ரயிலில் பாரம்பரிய பெருமையை பேணிக்காக்கும் வகையில் இந்த ரயில் இலவசமாகவே 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது.
எப்போது இயக்கப்படுகிறது?: இந்த வழித்தடத்தில் சுற்றிலும் பசுமை மற்றும் நீர்வீழ்ச்சிகள் காணப்படும் எனதால் சுற்றுலாப் பயணிகள் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதமாக இந்த ரயில் சேவை உள்ளது. இந்த ரயில், நங்கல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.05 க்கு புறப்பட்டு காலை 8.20 மணிக்கு பக்ராவை சென்றடைகிறது. மேலும், ரயில் நங்கலில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4:20 மணிக்கு பக்ரா ரயில் நிலையம் செல்கிறது.
டிக்கெட் பரிசோதகர் கிடையாது: இந்த ரயிலில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் விரும்பி பயணிக்கிறார்கள். இந்த ரயிலை ரயில்வேக்கு பதிலாக பக்ரா பியாஸ் மேனேஜ்மேண்ட் போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகர் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த ரயிலில் சுற்றுலாப் பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களும் அதிக அளவில் பயணித்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications