எங்கிருந்தோ வந்த குண்டு.. பாகிஸ்தான் மண்ணில்.. பொத்தென விழுந்து செத்த பதான்கோட் தாக்குதல் தீவிரவாதி!
டெல்லி: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் இந்திய விமானப்படை தளத்தில் கடந்த 2017 ல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு மாஸ்டர்மைண்ட்டாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் ஷாகித் லத்தீப் பாகிஸ்தானில் மசூதிக்குள்ளேயே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இந்திய விமானப் படை தளம் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் கடந்த 2017-ம் ஆண்டு பயங்கரவாதிகள் அங்கு ஊடுருவி தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து இந்திய ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
மேலும் பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் பதான்கோட் தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ-முகமது எனும் பயங்கரவாத அமைப்பு என்பது தெரியவந்தது. அதோடு ஷாகித் லத்தீப் என்பவர் தான் பதான்கோட் தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட் என்பது தெரியவந்தது.
இந்த ஷாகித் லத்தீப் கடந்த 1994ம் ஆண்டு சட்டவிரோத செயல் மூலம் இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 16 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டது. அதன்பிறகு 2010ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டதும் தெரியவந்தது. மேலும் பாகிஸ்தானில் அவர் ஜிகாதி குழுவில் இணைந்து தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
அதன் ஒருபகுதியாக தான் பதான்கோட் தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்ட்டாக அவர் இருந்ததும் தெரியவந்தது. அவர் மீது இந்தியாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவர் இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவர் பாகிஸ்தானில் இருந்து வந்தார். இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சியால்கோட்டில் உள்ள நூட் மசூதியில் அவர் மால்வியாக பணியாற்றி வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். மசூதிக்குள்ளே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் உடலில் குண்டுகள் பாய்ந்ததால் ஷாகித் லத்தீப் சரிந்து விழுந்து இறந்துள்ளார். இதையடுத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பித்துள்ளார்.
இருப்பினும் அந்த நபர் யார்? எதற்காக அவரை கொலை செய்தார்? என்பது பற்றிய பிற விஷயங்கள் எதுவும் தெரியவில்லை. இதுபற்றி பாகிஸ்தான் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications