ப.சிதம்பரம் சினிமா பார்த்திட்டிருப்பாருங்க.. நீங்க வேற.. வக்கீல் கலகல பேச்சு
டெல்லி: 'யாருக்குத் தெரியும் ப.சிதம்பரம் சினிமா கூட பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று அவரது வக்கீல்களில் ஒருவரான அஷ்வனிகுமார் காமெடியாக கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வழக்குகளில் ஆஜராகும் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவர் அஷ்வனிகுமார். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரான இவர் சிதம்பரத்துக்காகவும், அவர் மகன் கார்த்திக்காகவும் பல வழக்குகளில் ஆஜராகி வருகிறார்.

இந்நிலையில் இவரை நீதிமன்ற வளாகத்தில் சூழ்ந்துக்கொண்ட டெல்லி செய்தியாளர்கள், ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார்? ஏன் ஓடி ஒளிய வேண்டும் என கேட்டனர். அதற்கு பதிலளித்த அஷ்வனிகுமார், யார் சட்டத்தில் இருந்து ஓடி ஒளிவது? ப.சிதம்பரம் ஒரு வழக்கறிஞர், அவர் எப்படி சட்டத்தில் இருந்து ஓடி ஒளிய முடியும்.
அவர் இங்கு உறவினர்களுடன் இருக்கலாம், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கலாம், ஏன் சினிமா கூட பார்த்துக்கொண்டிருக்கலாம்.. யாருக்குத் தெரியும் என நக்கலாக பதிலளித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், ரம்பம் முதலே ஊடகங்கள் தான் ப.சிதம்பரத்தை குற்றவாளியை போல் பாவித்துவருவதாகவும் தனது கோபத்தை வெளியிட்டுள்ளார் வழக்கறிஞர் அஷ்வனிகுமார்.












Click it and Unblock the Notifications