நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் புயலை கிளப்பப்போகும் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் மீண்டும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது. பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் மீண்டும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடி இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியதாக சொல்லப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்தியாவில் 40 செய்தியாளர்கள் உள்பட 300 நபர்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் அவைகளும் முடங்கின. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. இந்த நிலையில் பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்க, உச்ச நீதிமன்றத்தால் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் இப்போது மீண்டும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சர், ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியா-இஸ்ரேல் உறவில் புதிய இலக்குகளை வகுக்க இது சிறந்த நேரம் என்று பிரதமர் கூறினார்.பெகாசஸ் மென்பொருளில் புதிய வெர்ஷன் உள்ளதா என்று விசாரிக்க இது தான் சிறந்த நேரம் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன் 2 பில்லியன் கொடுத்து மென்பொருளை வாங்கியது. 2024 தேர்தலுக்குள் இதைவிட வசதியான மென்பொருள் கிடைத்தால் 4 பில்லியன் கூட கொடுக்கலாம்" என்று கிண்டல் செய்யும் விதமாக ட்வீட் செய்துள்ளார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், பெகாசஸ் உளவு மென்பொருளை மோடி அரசு வாங்கியது அம்பலம் ஆகியுள்ளது. தேசத்துரோகம் குற்றச் செய்த மோடி பதவி விலக வேண்டும்" என்று ட்வீட் செய்து கனன்று கொண்டிருக்கும் நெருப்பை ஊதி விட்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, எனவே ரத்து செய்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும். கிரிமினல் வழக்கைப் பதிவு செய்வதற்கும், பெகாசஸ் மென்பொருள் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருப்பு தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பெரு நெருப்பாய் பற்றிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் மீண்டும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications