75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு .. பட்ஜெட்டில் குட் நியூஸ்!
டெல்லி: 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் இனிமேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
3 வருடங்களுக்கு பிறகு பழைய வருமான வரி கணக்குகள் மீண்டும் ஆய்வு செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது அவர் வருமான வரி தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதாவது:-சிறிய அளவிலான வருமான வரி பிரச்சினையை தீர்த்து வைக்க குழு அமைக்கப்படும். பெரிய அளவில் வரி ஏய்ப்பு கண்டுபிடித்தால் மட்டுமே 10 வருட வருமான வரி கணக்கு ஆய்வு செய்யபப்டும். 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் இனிமேல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை.
ஓய்வூதியம், வட்டி ஆகியற்றை மட்டும் நம்பி இருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம். 3 வருடங்களுக்கு பிறகு பழைய வருமான வரி கணக்குகள் மீண்டும் ஆய்வு செய்யப்படாது. வரி ஏய்ப்பவர்களை விரைவாகவும், எளிதாகவும் கண்டறிய நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.. பங்கு ஈவுத்தொகையில் வருமானத்துக்கு முன்கூட்டியே வரி செலுத்த தேவையில்லை. குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டங்களுக்கு 2022-ம் ஆண்டு வரை வரிச்சலுகை வழங்கப்படும். ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்ட குறைந்த விலை வீட்டுக் கடனில் வட்டிக்கான வருமான வரிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவாக 6.48 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். மறைமுக வரிகளில் வழங்கப்பட்டு வரும் 400 விதமான விலக்குகள் மறுபரிசீலனை செய்யப்படும். வருமான வரி அடுக்கு விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கம் போல் 5லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்ல. கார்ப்பரேட் வரிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.












Click it and Unblock the Notifications