டெல்லியில் மக்கள் செத்துக் கொண்டு இருக்கிறார்கள்.. அரசு வேடிக்கை பார்க்கிறது..சுப்ரீம் கோர்ட் வேதனை
டெல்லியில் மக்கள் காற்று மாசுபாட்டால் செத்து கொண்டு இருக்கிறார்கள், அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
Recommended Video
டெல்லி: டெல்லியில் மக்கள் காற்று மாசுபாட்டால் செத்து கொண்டு இருக்கிறார்கள், அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
காற்று மாசு காரணமாக டெல்லியில் மிக மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. டெல்லியில் காற்று மாசு புள்ளிகள் அபாய கட்டத்தில் இருக்கிறது. டெல்லியில் 8 இடங்களில் காற்று மாசு புள்ளிகள் 999 புள்ளியை தொட்டு இருக்கிறது.
இந்த நிலையில் டெல்லி மாசுபாட்டிற்கு எதிராக பல்வேறு பொதுநல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று சிறப்பு அமர்வு முன் நடைபெற்றது.

விசாரணை செய்தனர்
நீதிபதிகள் ஜேஜே அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அமர்வு இது தொடர்பான மனுவை விசாரித்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் மிக கடுமையான கேள்விகளை எழுப்பினார்கள். அவர்கள் தங்கள் விசாரணையில் டெல்லியில் இவ்வளவு மோசமான சூழ்நிலை நிலவுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எல்லா வருடமும் டெல்லி இப்படித்தான் சுவாசிக்க கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது.

பாதுகாப்பு இல்லை
மக்கள் டெல்லியில் பாதுகாப்பாக இல்லை . வீட்டிற்குள் கூட அவர்களால் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. ஒரு நல்ல நாட்டில் இப்படி எல்லாம் நடக்காது. இப்போதும் கூட டெல்லியில் மக்கள் வெடி வெடிக்கிறார்கள், குப்பைகளை கொட்டிக்கொண்டு, அதை எரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தீர்வு இல்லை
ஆனால் இதற்கு எல்லாம் எதிராக அரசால் எதுவும் செய்ய முடியவில்லை. மக்கள் குப்பைகளை எரித்துவிட்டு, பின் மூச்சும் அடைகிறது என்று புகார் அளிக்க முடியாது. இந்த மாசுபாட்டிற்கு எல்லோரும் ஒரு வகையில் பொறுப்புதான். இதற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இப்போதே
உடனடியாக தீர்வு, நீண்ட கால தீர்வு இரண்டையும் நாம் இப்போதே எடுக்க வேண்டும். காற்று மாசுவால் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். தினம் தினம் மக்கள் இறக்கிறார்கள், அரசு வேடிக்கை பார்க்கிறது. இதற்கு தீர்வு செய்வதாக பூச்சாண்டி மட்டும்தான் காட்டிக்கொண்ட இருக்கிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு இருப்பதாக தெரியவில்லை.

எல்லாம் விதி மீறல்
இனிமேலும் விதிமீறல்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம். டெல்லியில் நிலவும் கடுமையான மாசுபாட்டிற்கு பயிர்க்கழிவு எரிப்பு காரணம் என்றால் மாநில அரசு, கிராம பஞ்சாயத்துக்களே முழு பொறுப்பு. எல்லா மாநிலமும் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications