இந்திய மக்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள்.. ஜாமியா தாக்குதல் குறித்து காங். எம்பி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில் இந்திய மக்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

டெல்லி இஸ்லாமியா ஜாமியா பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச்சூடு மற்றும் சாஹீன் பக் துப்பாக்கிச்சூடு சம்பவம் என தலைநகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பி உள்ளது

People of India are being killed mercilessly: Adhir Ranjan Chowdhry on Jamia, Shaheen Bagh firing

இந்த சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "இந்தியாவின் பொது மக்கள் அரசியலமைப்பைக் காப்பாற்றவே போராடி வருகிறார்கள். அவர்கள் அரசியலமைப்புக்கான தங்களின் போராட்டத்தில் தேசிய கீதத்தை பாடி எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர், ஆனால் அப்படி போராடும் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. இந்திய மக்கள் இரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள். இப்படி துப்பாக்கிச் சூடு நடத்தியதன் பின்னணியில் பாஜகவின் குண்டர்கள் தான் காரணம்.

இந்த துப்பாக்கிச்சூடு என்பது ஆர்ப்பாட்டக்காரர்களை பயமுறுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் ஆளும் கட்சி செய்யும் சதி. ஆளும் கட்சியின் குண்டர்களே இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள் ஆனால் அரசு அமைதியாக இருக்கிறது. டெல்லி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது, இன்னும் அவர்களை எதுவும் செய்யவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+