3வது முறையாக மோடியை பிரதமராக மக்கள் தேர்வு செய்வார்கள்.. பாராட்டி தள்ளிய தேனி எம்பி ரவீந்திரநாத்
டெல்லி: வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், இந்திய மக்கள் ஒருமித்த கருத்தோடு, 3 வது முறையாக பிரதமர் மோடியை இந்தியாவின் பிரதமராக ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று தேனி எம்பி ரவீந்திரநாத் பேசினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி உரையுடன் அவை கூடியது. இடைக்கால பட்ஜெட் கடந்த 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய தேனி மக்களவை தொகுதி எம்.பி ஓபி ரவீந்திரநாத் கூறியதாவது:-

நான் பாராளுமன்ற உறுப்பினராக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த தருணத்தில் எங்கள் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இப்போது என்னை பேச அனுமதியளித்த சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது தேனி தொகுதி வெற்றிக்கு காரணமாக இருந்த பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
17வது லோக்சபா சபையின் கடைசி கூட்டத்தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றியது வரலாற்று சாதனை. ஒரு பழங்குடியினர் சமூகத்தினருக்கு இந்த வாய்பை கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்த பாஜக அரசு 3 ஜனாதிபதிகளை கொடுத்துள்ளது. ஒருவர் அப்துல்கலாம். ஒருவர் ராஜ்நாத் சிங். ஒருவர் திரவுபதி முர்மு.
ஒருவர் சிறுபாண்மை சமூகத்தினர். ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர். ஒருவர் பழங்குடியின சமூகத்தினர். சுதந்திர இந்தியாவில் இத்தகைய சமூகத்தினருக்கு இப்படி ஒரு வாய்ப்பினை எந்த அரசாங்கமும் தரவில்லை என்பதை இங்கு பதிவு செய்கிறேன். அதுபோல இந்த புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவதற்கு உள்ளே வரும் போது அவருக்கு முன்பாக தமிழகத்தில் இருந்து பெறப்பற்ற செங்கோல் வந்தது தமிழகத்திற்கு தமிழக கலாசாரத்திற்கு பெருமையான ஒன்றாகும்.
இதுவரை ஐநா சபையில் பேசிய பிரதமர்களில், தமிழில் பேசிய ஒரே பிரதமர் நமது பிரதமர் மோடி தான். தமிழர் பெருமைகளை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தவர் பிரதமர் மோடி தான். சுதந்திரத்திற்கு பிறகு நமது நாட்டில் பிறந்து முதல் முறையாக பிரதமர் ஆனவர் மோடி தான். மேக் இன் இந்தியா மூலம் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் மோடி.
தமிழ்நாட்டின் வரலாற்றினை எடுத்துக்கொண்டால், அயோத்தியில் ராமர் கோவில் 500 ஆண்டுகளுக்கு பிறகு கட்டப்பட்டு தற்போது சீரும் சிறப்புமாக திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்திய குடிமகனுடைய கனவை நிறைவேற்றியிருக்கிறார் பிரதமர் மோடி. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்பு, ராமநாதபுரம் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தார் பிரதமர் மோடி. இந்த ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது இந்த மக்கள் வசிக்காத கட்சத்தீவு.
17 ஆம் நூற்றாண்டில் சேதுபதி மன்னருக்கு சொந்தமாக இருந்தது. சேதுபதி மன்னர் வெளியிடப்பட்ட செப்பு பட்டயத்தில், கட்சத்தீவையும் அதையும் தாண்டி இலங்கை தலைமன்னார் வரைக்கும் நமது ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1822 ஆம் ஆண்டில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி, ராமநாதபுரம் சமஸ்தானத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டது. அதன்படி, கட்சத்தீவு உட்பட ராமநாதபுரத்திற்குட்பட நிலப்பரப்பை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக்கொள்ள உரிமை வழங்கப்பட்டது.
ஆக வரலாற்றை எடுத்து பார்த்தால், கட்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாக தான் இருந்தது. தமிழ்நாட்டின் ஒரு பகுதி. ஆனால் இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி கட்சத்தீவை இலங்கைக்கு பரிசாக கொடுத்துவிட்டார். இதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் நம் நாட்டின் ஒரு பகுதியை அங்கே கொடுத்துவிட்டார்.
இன்றைக்கு ஜம்மு காஷ்மீரில் நம்ம மக்கள், நம்ம பகுதி மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்று ஒரு சட்டத்தை இயற்றும் போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் நாம் இழந்த கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று இதுவரை போராடவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனால் நமது பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டு தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
2014 ஆம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக இந்தியாவில் புதிய பாதையை அமைத்து அடுத்த கட்ட வளர்ச்சிக்காக வல்லரசு நாடாக நமது இந்தியா வளர்வதற்கு அடித்தளம் போட்டிருக்கிறார் பிரதமர் மோடி. வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், இந்திய மக்கள் ஒருமித்த கருத்தோடு, 3 வது முறையாக பிரதமர் மோடியை இந்தியாவின் பிரதமராக ஆட்சியில் அமர்த்துவார்கள் என்று கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications