2024-ல் செங்கோட்டையில் கொடியேற்றுவது யார்னு மக்கள்தான் சொல்லனும்..பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி
டெல்லி: டெல்லி செங்கோட்டையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ல் யார் கொடியேற்றுவது என்பது குறித்து நாட்டு மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என பிரதமர் மோடிக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் கேசி வேணுகோபால் எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டும் தாமே ஆகஸ்ட் 15-ந் தேதியன்று டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றுவேன் என கூறியிருந்தார்.

அதாவது லோக்சபா தேர்தலில் பாஜக வென்று தாம் மீண்டும் பிரதமராவேன்; அப்போது ஆகஸ்ட் 15-ல் தேசிய கொடியை டெல்லி செங்கோட்டையில் மீண்டும் ஏற்றுவேன் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் இப்பேச்சு தொடர்பாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது: ஆமாம்... பிரதமர் மோடி அடுத்த ஆண்டும் ஆகஸ்ட் 15-ல் தேசிய கொடி ஏற்றுவார்.. ஆனால் அவரது வீட்டில்தான் தேசிய கொடி ஏற்றுவார். ஒவ்வொருவரும் தேர்தலில் மீண்டும் நாங்கள் வெல்வோம்; ஆட்சியை பிடிப்போம் என சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உங்களது வெற்றி, தோல்வி என்பது மக்களின் கைகளில், வாக்காளர் கைகளில்தான் உள்ளது. 2023-ல் நின்று கொண்டு 2024-லும் நான் தான் தேசிய கொடி ஏற்றுவேன் என சொல்வது அகம்பாவம்/ ஆணவம். சுதந்திர தின நாளிலும் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி விமர்சித்து கொண்டிருந்தால் அவரால் எப்படி தேசத்தை கட்டமைக்க முடியுமாம்? இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் கூறுகையில், 2024 தேர்தலில் யார் வெல்வது என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். ஆகையால் 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடியும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்றார்.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே கூறுகையில், ஒவ்வொரு கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசிய அமித்ஷா, ஒருவரை நோக்கி நீங்கள் கை நீட்டி பேசும் போது உங்களை 3 விரல்கள் நோக்கி இருக்கும் என்றார். அதனைத்தான் திரும்பவும் சொல்கிறோம். மணிப்பூர் மக்கள் அன்பையும் ஆதரவையும்தான் கேட்கின்றனர் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications