டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வர் ஸ்டாலினின் விடா முயற்சியால் பேரறிவாளனுக்கு விடுதலை: தமிழக அரசு வழக்கறிஞர் பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: பேரறிவாளன் விடுதலை என்பது முதல்வர் முக ஸ்டாலினின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் குமணன் கூறினார்.

Recommended Video

    Perarivalan தாய் Arputhammal தாய்மையின் இலக்கணமாக இருக்கிறார் - முதல்வர் Stalin பாராட்டு

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டார். தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை தமிழ்நாடு ஆளுநர் ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் பேரறிவாளவன் மனுதாக்கல் செய்தார்.

    உச்சநீதிமன்றமே சொல்லியாச்சு.. ஆணவத்தை கைவிடுங்க ஆளுநரே! - பேரறிவாளன் விடுதலை பற்றி வன்னியரசு கருத்து உச்சநீதிமன்றமே சொல்லியாச்சு.. ஆணவத்தை கைவிடுங்க ஆளுநரே! - பேரறிவாளன் விடுதலை பற்றி வன்னியரசு கருத்து

    விசாரணை முடிந்தது

    விசாரணை முடிந்தது

    உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களாக வழக்கில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் தண்டனை கைதி ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார். சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது . அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது. ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர். அவர் அதில் முடிவு எடுக்க வேண்டும். மாறாக 3 வருடமாக ஒரு முடிவை கிடப்பில் போட கூடாது. ஆயுள் தண்டனையை விடுதலை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. இந்த விவகாரத்தில் அவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையை அழித்துவிட்டனர். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என எங்கும் குறிப்பிடப்படவில்லை, என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்தது.

    தீர்ப்பு ஒத்திவைப்பு

    தீர்ப்பு ஒத்திவைப்பு

    இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வைத்த வாதத்தில், ஆளுநர் எப்படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால் அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு. இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கே இது எதிரானது. பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும். அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது . அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம், என்று கூறியது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்தது தீர்ப்பு ஒத்திவைப்பு

     பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை

    இந்நிலையில் இன்று வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிடத்தது. உச்சநீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 142வது பிரிவை செயல்படுத்தி விடுதலை செய்தது. உச்சநீதிமன்றம் நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா, பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் குமணன் ஆஜரானார். இதுபற்றி அவர் கூறியதாவது:

    முதல்வர் முயற்சிக்கு வெற்றி

    முதல்வர் முயற்சிக்கு வெற்றி

    இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் முதலில் இருந்தே கணிவோடும், பணிவோடும் விடுதலையை நிறைவேற்ற வேண்டி செயல்பட்டு வந்தார். இதற்காக அரசு வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அதன்படி இன்று மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. முதல்வர் எடுத்த விடாமுயற்சிக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

    142யை பயன்படுத்தி விடுதலை

    142யை பயன்படுத்தி விடுதலை

    ஆர்ட்டிக்கள் 161ன்படி தமிழக அமைச்சரவை ஒரு முடிவு எடுத்தால் அது அம்மாநில ஆளுநருக்கு கட்டுப்பட்டது தான். இது தனக்கு கட்டுப்படாது என ஆளுநர் கூறியது அரசியலமைப்பு சட்டத்தின்படி ஏற்று கொள்ள முடியாதது என நீதிமன்றம் கூறியது. மேலும் அமைச்சரவை எடுத்த முடிவு பற்றி ஆளுநருக்கு அனுப்பியும் அதன்மீது இரண்டரை ஆண்டுகள் முடிவுகள் எடுக்காமல் தாமதிக்கப்பட்டது. இது சட்டவிரோதமானது என தெரிவித்தது. மேலும் குடியரசு தலைவருக்கு அமைச்சரவை முடிவை அனுப்பி வைத்தது அரசியல் சாசனத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாது. இதையடுத்து ஆர்ட்டிக்கள் 142யை பயன்படுத்த நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

    2 விஷயங்களில் கவனம்

    2 விஷயங்களில் கவனம்

    இந்த வழக்கில் 2 விஷயங்களில் கவனம் செலுத்தினோம் முதலாவது என்னவெனில் அமைச்சரவையில் முடிவு செய்தால் அது ஆர்ட்டிக்கள் 161ன்படி கண்டிப்பாக மாநில ஆளுநரை கட்டுப்படுத்தும். அது கட்டுப்படுத்தாது என தமிழக ஆளுநர் கூறினார். இதனால் மாநில உரிமையை நிலைநாட்டுவதில் முதல்வர் உறுதியாக இருந்தார். இதை தான் எழுத்துபூர்வ தாக்கலின்போது வழங்கினோம். அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என குடியரசு தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதமானது என்பதையும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த 2 விஷயத்திலும் வெற்றி கிடைத்துள்ளது'' என்றார்.

    English summary
    Tamil Nadu State Attorney Kumanan says, the release of Perarivalan was a victory for Chief Minister Stalin's effort
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X