டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிர்ச்சி.. இந்தியாவிலும் பரவியது தென்னாப்பிரிக்கா, பிரேசில் வகை கொரோனா வைரஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் பரவும் புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ் பாதித்த நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தலைவர் பார்கவா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவியதன் காரணமாக பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியா உட்பட 82 நாடுகளில் இங்கிலாந்தில் பரவிய புதுவகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

Persons affected with South Africa variant coronavirus found in India

அதேநேரம் தென்னாப்பிரிக்காவில் பரவிய வேறுவகையான கொரோனா வைரஸ் அமெரிக்கா உட்பட 41 நாடுகளில் பரவி இருந்தது. பிரேசில் நாட்டில் பரவும் உரு மாறிய கொரோனா மொத்தம் 9 நாடுகளில் பரவியது கண்டறியப்பட்டது. இந்த நிலையில்தான் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வந்ததில் சிலருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 4 பேருக்கு தென்னாப்பிரிக்க வகை வைரஸ் பாதிப்பும், ஒருவருக்கு பிரேசில் நாட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பார்கவா தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா வகை கொரோனா, நோயாளியின் நுரையீரலில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் நாட்டில் பரவிய கொரோனா வைரஸ், தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கான அளவுக்கு தங்கள் புரத நிலையில் மாற்றம் செய்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

கம்பியை பிடிச்சு.. அப்படி குலுங்கி குலுங்கி அழுதாரே கம்பியை பிடிச்சு.. அப்படி குலுங்கி குலுங்கி அழுதாரே "ஏசி" சண்முகம்.. இன்னைக்கு செம "கூல்" போல..!

இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை தவிர்த்து பிற பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் நாட்டு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புடன் சிலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களில் வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் செய்யப்பட்டு உள்ளது. அதே போன்று தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கும் சான்றிதழ் கட்டாயம் என்று கூறப்பட்டாலும் அந்த நாடுகளில் இருந்து தற்போது இந்தியாவுக்கு நேரடியாக விமான சேவையை இல்லை என்பதால் இவர்கள் வேறு நாடுகள் சென்று அங்கிருந்து இந்தியா வருவதால் கண்காணிப்பதில் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

English summary
4 persons affected with South African variant coronavirus and 1 person affected with Brazil variant coronavirus have been found in India, says ICMR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X