கச்சத்தீவை மீட்கக் கோரி மனு.. நிலுவை வழக்குடன் சேர்த்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
டெல்லி: கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி மேலும் ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மனுக்களோடு சேர்த்து இந்த மனுவையும் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கச்சத்தீவானது ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமாக இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சமஸ்தான முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
சமஸ்தானத்திற்கு சொந்தமான நிலப்பகுதியை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. தமிழக மீனவர்கள் தங்களது மீன் வலைகளை காய வைக்கவும், சமையல் செய்யவும் கச்சத்தீவை உபயோகித்து வந்தனர்.

இந்தியா- இலங்கை
இது போன்ற சூழலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கடந்த 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப்படையில கச்சத்தீவு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இது சட்டவிரோதமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாட்டு பிரதமர்களுக்கும் அதிகாரம் இல்லை.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தின் லோக்சபை மற்றும் ராஜ்யசபையில் ஒப்புதல் பெறாததால் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது. எனவே கச்சத்தீவை மீண்டும் இந்திய அரசிடமே ஒப்படைக்க வேண்டும். அது போல் கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்த காலம் மாறிவிட்டது.

கச்சத்தீவு
கச்சத்தீவை இலங்கை கடற்படையினர் தங்களுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே இதுவரை 1500 மீனவர்களை இலங்கை கடற்படை கொன்றுள்ளது. இலங்கையிடம் இருந்து இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக சட்டசபையில் கடந்த 2013 ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்
இந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே 1974 ஆம் ஆண்டு கையெழுத்தான கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யக் கோரி மத்திய அரசுககு நீதிமன்றம் உத்தரவிட வேணடும். அது போல் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

100க்கும் மேற்பட்டோர்
இந்த மனுவை நீதிபதி ஹெமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஜெயசுகின் ஆஜராகினார். ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுவதாக தன் வாதத்தை எடுத்துரைத்தார்.

நீதிபதி அனுமதி
அப்போது நீதிபதி அமர்வு, இதே விவகாரம் குறித்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளதே அதை விசாரித்து தீர்ப்பு அளித்தால் போதாதா என கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரரின் வழக்கறிஞர் "ஜெயலலிதாவின் மனுவுடன் எனது கட்சிக்காரரின் மனுவையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என்றார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications