எகிறி அடிக்கும் பெட்ரோல் விலை.. கதிகலங்கும் மக்கள்.. சென்னையில் ஒரு லிட்டர் 101.79 ரூபாய்

பெட்ரோல் டீசல் விலை இன்றும் உச்சத்தை தொட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து 101 ரூபாய் 79 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 33 காசுகள் உயர்ந்து 97 ரூபாய் 59 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது..

பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. இதனால், அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த மாதம் 24-ந்தேதி முதல் டீசல் விலையும் மறுபடியும் அதிகமாக தொடங்கிவிட்டன. அப்போதிருந்து இப்போது வரை அந்த விலையும் குறையவே இல்லை..

தொற்று

தொற்று

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது ஆறுதலை தந்தது.

 விலை குறைப்பு

விலை குறைப்பு

கடந்த ஆகஸ்டு மாதம் 2-வது வாரத்தில் இருந்து விலை குறைந்து காணப்பட்ட நிலையில், அதற்கு பிறகு பெருமளவில் விலை குறையவே இல்லை. அந்த வகையில், சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 101.53 ரூபாய், டீசல் லிட்டர் 97.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று, சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.79 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 97.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 வாகன ஓட்டிகள்

வாகன ஓட்டிகள்

இப்படி தினம் தினம் விலை உயர்ந்து கொண்டு போவதால், வாகன ஓட்டிகள் கலங்கி போயுள்ளனர். ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த நிலை நீடித்து வருகிறது. பெரும்பாலான நகரங்களில் கடந்தசில நாட்களாகவே பெட்ரோல் விலை டேராடூன், சண்டீகா், கவுகாத்தி, ராஞ்சி போன்ற நகரங்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.100-க்கு கீழ் இருந்து வருகிறது.. ஆனால், இப்போது ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது.

Recommended Video

    மீண்டும் சதம் அடித்த பெட்ரோல் விலை… வாகன ஓட்டிகள் கவலை!
     விலை உயர்வு

    விலை உயர்வு

    நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை ஞாயிற்றுக்கிழமையும் எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்த நிலையில், நாட்டின் தலைநகரங்களிலும் விலை உயர்ந்துள்ளது.. அதாவது பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகளும் அதிகரிக்கப்பட்டது. இந்த விலை உயர்வைத் தொடர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் மும்பையில் ரூ.110.12-க்கும், டெல்லியில் ரூ.104.14-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    ராஞ்சி

    ராஞ்சி

    மும்பை, ஹைதராபாத், காந்திநகரிலும் ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.100-ஐ கடந்துவிட்டது.. ஒரு லிட்டா் டீசல் விலை மும்பையில் ரூ.100.66-ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.101.27-ஆகவும், காந்திநகரில் ரூ.100.21-ஆகவும், லேயில் ரூ.100.06-ஆகவும் அதிகரித்தது... சத்தீஸ்கா் தலைநகர் ராய்ப்பூர், மத்திய பிரதேசம் தலைநகர் போபால், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ கடந்து சென்றுவிட்டது. ராஞ்சியில் மட்டும் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.98.66-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+