ரெடியா? விரைவில் பல மடங்கு உயர போகும் பெட்ரோல் விலை.. செஞ்சுரி அடித்தது கச்சா எண்ணெய்.. அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிய நிலையில் அது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதோடு இந்தியாவில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பெட்ரோல், டீசல் விலை கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

தேர்தல் நேரம்

தேர்தல் நேரம்

தேர்தல் முடிந்த பின் மொத்தமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் கச்சா எண்ணெய் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. ரஷ்யாவிற்கு பல்வேறு விதமான ஏற்றுமதி தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் ரஷ்யாவில் இருந்து வர கூடிய பெரும் அளவிலான கச்சா எண்ணெய் முடங்கி உள்ளது.

ரஷ்யா தடை

ரஷ்யா தடை

இதை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் போரால் சர்வதேச கடல் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவும் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு காரணமாக அமைந்து உள்ளது. அதன்படி West Texas Intermediate கச்சா எண்ணெய் வகை 10 சதவிகிதம் உயர்ந்தது. தற்போது அதன் ஒரு பேரல் 105 டாலருக்கு விற்பனை ஆகிறது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

அதேபோல் Brent கச்சா எண்ணெய் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதன் ஒரு பேரல் 107 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 வருடங்களில் இல்லாத மிக அதிக விலை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அமெரிக்கா தங்கள் கிடங்குகளில் வைத்து இருந்த எண்ணெய்யை தற்போது வெளியிட்டு வருகிறது. இது சில காலத்திற்கு தாக்கு பிடிக்கும் என்றாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு எட்டிப்பார்க்கும் வாய்ப்புகள் உள்ளன.

இப்போது விலை என்ன?

இப்போது விலை என்ன?

ரஷ்யாவில் இருந்து வரக் கூடிய 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வராததே இந்த விலை உயர்விற்கு காரணம். இதனால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 150 டாலரை எட்டும் அபாயம் உள்ளது. இதனால் சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை உயரும். தேர்தல் முடிந்த பின் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது. தற்போது சென்னையில் பெட்ரோல்- Rs 101.40 per litre, டீசல் - Rs 91.43 per litre ஆகிய விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மற்ற நகரங்களில் விலை என்ன?

மற்ற நகரங்களில் விலை என்ன?

மார்ச் 8ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற பின் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பின்வருமாறு,

கொல்கத்தா

  • பெட்ரோல்- Rs 104.67 per litre
  • டீசல் - Rs 89.79 per litre
  • போபால்

    • பெட்ரோல்- Rs 107.23 per litre
    • டீசல் - Rs 90.87 per litre
    • ஹைதராபாத்

      • பெட்ரோல்- Rs 108.20 per litre
      • டீசல் - Rs 94.62 per litre
      • மும்பை

        • பெட்ரோல்- Rs 109.98 per litre
        • டீசல் - Rs 94.14 per litre
        • டெல்லி

          • பெட்ரோல்- Rs 95.41 p per litre
          • டீசல் - Rs 86.67 per litre
          • பெங்களூர்

            • பெட்ரோல்- Rs 100.58 per litre
            • டீசல் - Rs 85.01 per litre

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+