பிஎஃப் ஓய்வூதியம்.. மாத சம்பளம் வாங்குவோர் எதிர்பார்த்த இரண்டு நல்ல விஷயம்.. மத்திய அரசு சூப்பர்
டெல்லி: மாத சம்பளம் வாங்குவோர் பல நாட்களாக எதிர்பார்த்து வந்த இரண்டு நல்ல விஷயங்களை தீபாவளி நேரத்தில் மத்திய அரசு பரிசீலித்துள்ளது. அந்த இரண்டுமே பிஎஃப் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம் ஆகும். மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் நேற்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில் குறைந்தபட்ச பி.எஃப். ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவை தீவிரமாகப் பரிசீலித்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
மாத சம்பளம் வாங்குவோருக்கு இருக்கும் குறைந்த பட்ச பாதுகாப்பு என்றால் அது பிஎஃப் பணம் தான். கல்லி கட்டணம், வீடு கட்டுவதற்கு போதிய பணம் இல்லாத சூழல், மருத்துவ அவசரம் ஆகிய சூழல்களில் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல், பிஎஃப் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். அந்த பணத்தை எடுக்காமல் வைத்திருந்தால் மிகப்பெரிய லாபம் மாத சம்பளம் வாங்குவோருக்கு கிடைக்கும் என்றாலும், அவசரமான சூழலில், வேறு வழியே இல்லாத சூழலில் பிஎஃப் பணத்தில் கை வைக்கிறார்கள்..

தலைநகரம் படத்தில் வடிவேலு சென்னை போகும் போது, அவசரத்திற்கு ஒரு பெட்டியை அவருடைய தாத்தா கொடுத்து விடுவார். அந்த பெட்டியை எதற்காகவும் திறக்கக்கூடாது என்றும், உன்னால் செயல்படவே முடியாது என்கிற சூழலில் மட்டும் திறந்து பார்.. உனது ஆபத்திற்கு உதவும் என்று வடிவேலுவிற்கு தாத்தா சொல்வர்.. அப்படியான சூழலில் வடிவேலு திறந்து அதில் உள்ள கத்தியை காட்டி தப்பிப்பார்.
அதுபோல் தான், செயல்படவே முடியாத சூழலில் மட்டுமே பிஎஃப் பணத்தில் கைவைக்க வேண்டும். அப்போது நிச்சயம் பிஎஃப் பணம் கைகொடுக்கும்.. இந்த பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. இந்நிலையில், அவசரமான சூழலில், இனி நீங்கள் உங்கள் பிஎஃப் கணக்கில் 100% வரை (பணியாளர் மற்றும் முதலாளி ஆகியோரின் பங்குகள் உட்பட) திரும்பப் பெற முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
திருமணம் மற்றும் கல்விக்கு பிஎஃப் அட்வான்ஸ் பெறுவதற்கு வரம்புகள் உள்ளது. இப்போது கல்விக்கான திரும்பப் பெறுதல்கள் 10 மடங்கு வரையும், திருமணத்திற்கு 5 மடங்கு வரையும் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பிஎஃபில் அட்வான்ஸ் கோரிக்கை வைக்க குறைந்தபட்ச சேவை காலம் 12 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் எல்லாம் நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்திற்கு பின் எடுக்கப்பபட்டது.
இது ஒருபுறம் எனில், டெல்லியில் நடைபெற்ற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டம் நடந்தது. இதில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், குறைந்தபட்ச பி.எஃப். ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார்.
இந்த விவகாரம் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலிலேயே கிடையாது. எனினும் மத்திய அறங்காவலர் வாரியத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் விவாதத்தின் போது, குறைந்தபட்ச பி.எஃப். ஓய்வூதியத்தை தற்போதுள்ள மாதம் ரூ.1,000/- லிருந்து திருத்தி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அதிக ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் குறித்தும் கூட்டத்தில் விவாதித்தனர். தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அறங்காவலர் வாரிய உறுப்பினர்கள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப புதிய வழிகாட்டுதல்களை EPFO உருவாக்க வேண்டும் என்று வாதிட்டார்கள். இதையடுத்தே குறைந்தபட்ச பி.எஃப். ஓய்வூதியத்தை தற்போதுள்ள மாதம் ரூ.1,000/- லிருந்து திருத்தி அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
இந்த கூட்டத்தில் EPS'95 ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டிற்கே வந்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை வழங்க இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியுடன் (IPPB) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடவும் மத்திய அறங்காவலர் வாரியம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications