மூக்கில் உரிஞ்சும் வகையில் கொரோனா தடுப்பு மருந்து.. 2 ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி!
டெல்லி: மூக்கில் உரிஞ்சும் வகையில் உள்ள கொரோனா தடுப்பு மருந்து 2 ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது. இந்தியாவில் ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்படுகிறது.
Recommended Video
தொடக்க காலத்தில் மக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி மூன்றாவது அலையில் இருந்து மக்களை பாதுகாக்கும் என்று கூறப்படுவதால் மக்கள் ஆர்வமாக தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் பாரத் பயோடெக்கின் பிபிவி 154 இன்ட்ரானசல் தடுப்பு மருந்து இரண்டாம் கட்ட சோதனைகளுக்கான ஒழுங்குமுறை ஒப்புதலை பெறுவதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மனித மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட முதல் தடுப்பு மருந்து இதுவாகும்
தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிடப்பட்ட தகவலின் படி இன்ட்ரானசல் தடுப்பு மருந்து மூலம் t18 முதல் 60 வயது வரையிலான வயதினருக்கு மருத்துவ சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த தடுப்பு மருந்து மூக்கு வழியாக கொடுக்கப்படுகிறது நாசி தெளிப்பு போன்ற சுவாச பாதைக்கு நேரடியாக மருந்து அளவு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பூசிகள் முதலில் எலிகள் மீது சோதனை செய்த போது சிறந்த பலன்களை அளித்தது. இதனை தொடர்ந்து மனிதர்களுக்கும் சோதனை செய்தபோது நல்ல பயனை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. மூக்கு வழியாக வழங்கப்படும் இந்த தடுப்பு மருந்து பரவலான நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications