ஜி7 மாநாடு! பிரதமர் மோடி கையோடு கொண்டுபோன பரிசுகள்! யார் யாருக்கு என்ன கொடுத்துருக்கார்னு பாருங்க..!
டெல்லி : ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அதில் கலந்து கொண்டர் தலைவர்களுக்கு இந்தியாவிலேயே தாயாரிக்கப்பட்ட பல்வேறு கலை மற்றும் கைவினைப்பொருட்களை பரிசாக வழங்கினார்.
Recommended Video

1/12 - அமெரிக்க அதிபர் பைடன் முதல் ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோ வரை ஓவ்வொருக்கும் பார்த்து பார்த்து பிரதமர் நரேந்திர மோடி என்னென்ன? பரிசுகளை வழங்கினார் என்பதை தற்போது பார்க்கலாம்..

2/12 - ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு பிரதமர் மோடி, மெட்டல் மரோடி செதுக்கப்பட்ட 'மட்கா' ஒன்றை பரிசாக வழங்கினார். நிக்கல் பூசப்பட்ட, கையாலேயே தயாரிக்கப்பட்ட பித்தளைப் பாத்திரம் மொராதாபாத் மாவட்டத்தின் தலைசிறந்த படைப்பாகும். இது 'மரோடி' என்று அழைக்கப்படுகிறது.

3/12 - பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 'குலாபி மீனகரி' ப்ரூச் மற்றும் கஃப்லிங்க் செட் ஒன்றை பரிசாக வழங்கினார். குலாபி மீனகரி என்பது உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியின் குறியிடப்பட்ட கலை வடிவமாகும். அமெரிக்காவில் முதல் பெண்மணி ஜில் பிடனுக்கான ப்ரூச்சுடன் அமெரிக்க அதிபருக்காக இந்த கஃப்லிங்க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

4/12 - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் இருந்து பிளாட்டினம் வர்ணம் பூசப்பட்ட, கையால் வரையப்பட்ட தேநீர் பெட்டியை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார். இந்த ஆண்டு கொண்டாடப்படும் குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலியை முன்னிட்டு பிளாட்டினம் உலோக வண்ணப்பூச்சுடன் கிராக்கரி உருவாக்கப்பட்டுள்ளது.

5/12 - பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு சர்தோசி பெட்டியில் இருந்த இட்ர் பாட்டில்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கேரியர் பாக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜாரி ஜர்தோசி பெட்டியானது, பிரெஞ்சு தேசியக் கொடியின் வண்ணங்களில் காதி பட்டு மற்றும் கை எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது. இந்த பெட்டியில் அட்டர் மிட்டி, மல்லிகை எண்ணெய், அத்தர் ஷமாமா, அத்தர் குலாப், அயல்நாட்டு கஸ்தூரி மற்றும் கரம் மசாலா ஆகியவை அடங்கியுள்ளன.

6/12 - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி கையால் செய்யப்ப பட்டு கம்பளங்களை பரிசாக வழங்கினார். ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர் பகுதியில் காஷ்மீரி பட்டு கம்பளங்கள் முக்கியமாக தயாரிக்கப்படுகின்றன.

7/12 - ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி கருப்பு மட்பாண்ட பாத்திரங்களை பரிசாக வழங்கினார். உத்தரபிரதேச மாநிலம் நிஜாமாபாத்தில் கருப்பு மட்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

8/12 - இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகிக்கு பிரதமர் மோடி மார்பிள் கல் பதிக்கப்பட்ட டேபிள் டாப்பை பரிசாக வழங்கினார். பளிங்கு மேல் ஆக்ராவின் புகழ்பெற்ற ஓவியங்கள் மற்றும் வண்ணங்கள் அதில் இடம் பெற்றுள்ளது.

9/12 - தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுக்கு ராமாயண கருப்பொருளுடன் கூடிய டோக்ரா பொம்மையை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். டோக்ரா கலை என்பது இரும்பு அல்லாத உலோக வார்ப்புக் கலையாகும், இது லாஸ்ட்-மெழுகு வார்ப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி சத்தீஸ்கரில் உருவாக்கப்பட்டுள்ளது.

10/12 - அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு நந்தி மற்றும் சிவபெருமானை கருப்பொருளாகக் கொண்டு கொண்ட டோக்ரா பொம்மையை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.

11/12 - செனகல் அதிபர் மேக்கி சாலுக்கு பிரதமர் மோடி கோரைப்புல்லை மூலமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கூடைகள் மற்றும் காட்டன் துண்டுகளை பரிசாக வழங்கினார். பிரயாக்ராஜைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த கைவினைக் கலைஞர் இதனை உருவாக்கியுள்ளார்.

12/12 - உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தயாரிக்கப்பட்ட ராம் தர்பாரை இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இந்த கலைப்படைப்பில் ஸ்ரீ ராமர், சீதா தேவி, ஹனுமான் மற்றும் ஜடாயு உள்ளிட்ட ராமாயணத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications