ராம்விலாஸ் பாஸ்வான் வகித்த உணவு வினியோக துறை பியூஷ் கோயலிடம் ஒப்படைப்பு
டெல்லி: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று காலமான நிலையில் அவர் வகித்த அமைச்சரவை பொறுப்புக்கள், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகை இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது.

மறைந்த, ராம் விலாஸ் பாஸ்வான் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராக இருந்தார். இப்போது இந்த கூடுதல் துறைகளை பியூஷ் கோயல் ஏற்றுக்கொள்வார். பியூஷ் கோயல் வசம், ரயில்வே அமைச்சகம் மற்றும் வர்த்தக-தொழில்துறை அமைச்சகங்கள் ஏற்கனவே உள்ளன.
இதனிடையே இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டில் தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி, அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
நாளை, ராம் விலாஸ் பாஸ்வானின் இறுதி சடங்குகள் பாட்னாவில் நடைபெற உள்ளது. அதில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசின் சார்பில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம்விலாஸ் பாஸ்வானுடன் சேர்த்து கடந்த 15 நாட்களில் இரண்டு மத்திய அமைச்சர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர். ராம் விலாஸ் பாஸ்வானுக்கு முன்பு, செப்டம்பர் 23ம் தேதி ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்கடி கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தார்.
ராம் விலாஸ் பாஸ்வான் பீகாரில் மட்டுமல்ல, நாடு முழுக்கவே முக்கிய தலித் தலைவராக விளங்கியவர். 74 வயதான ராம் விலாஸ் பாஸ்வான் டெல்லி மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதய பாதிப்பால் நேற்று இரவு உயிரிழந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications