"சீக்கிரமா ஸ்கூலை திறங்க.. மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுங்க".. சுப்ரீம் கோர்ட்டுக்கு போன மாணவி
பள்ளிகளை திறக்கவிடக் கோரி மாணவி வழக்கு தொடுத்துள்ளார்
டெல்லி: பள்ளிகளை விரைவாக திறந்து, மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்ல மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பள்ளி மாணவி ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த 2 வருஷமாகவே கொரோனா நம்மை தாக்கி கொண்டிருக்கிறது.. அதனால், கடந்த 2020-ல் இருந்தே பள்ளிகள் மாணவர்கள் நலன் கருதி மூடப்பட்டுள்ளது..
சில மாநிலங்களில் மட்டும் 10, 12ம் வகுப்பு திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது.. சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடக்காமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பல மாநிலங்களும் இதையே கடைபிடித்தன.

3வது அலை
அதேசமயம், எனினும் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ஆன்லைன் கிளாஸ்கள் நடந்து வருகின்றன.. இப்போது கூட தொற்று முழுமையாக குறையவில்லை.. 3வது அலை வரப்போவதாக சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த வருஷமும் வீட்டில் முடங்கி போய் ஆன்-லைன் கிளாஸ் படித்து வரும் மாணவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கூடங்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான் டெல்லியை சேர்ந்த 12-,ம் வகுப்பு மாணவி வழக்கறிஞர் அமர் பிரேம் பிரகாஷ் என்பவர் மூலம் பொதுநல மனுத்தாக்கல் ஒன்றினை செய்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது: கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்..

ஆன்லைன் கிளாஸ்
வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆன்-லைன் வகுப்பிற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளும் இல்லை... இதனால் குழந்தைகளுக்கு கல்வி என்ற அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. ஏற்கனவே வறுமையில் வாடிய ஏழை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆன்-லைன் வகுப்பு செல்ல முடியாமல், குழந்தை தொழிலாளர் நிலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது..

மாணவர்கள்
ஏழை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளால் ஆன்-லைன் வகுப்புக்கு பணம் செலுத்தவும் முடியவில்லை, தனியாக டியூஷன் வைத்து கொள்ளவும் இயலவில்லை. அதனால், பள்ளிகளை விரைவாக திறந்து மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்ல மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவோ, அல்லது வழிகாட்டலோ வகுக்க வேண்டும்..

பள்ளிகள்
இனியும் காலம் தாழ்த்தாமல், முழுமையான, விரைவான முடிவை பள்ளி திறப்பு குறித்து எடுக்கவேண்டும்... இது நாடுமுழுவதும் உள்ள மாணவர்கள் மனநிலை, உணர்வு குறித்த விவகாரம்..." என்று அந்த மாணவி கேட்டுக் கொண்டுள்ளார். தொற்று பாதிப்பு இன்னும் நாட்டில் குறையாத நிலையில், பள்ளிகள் திறப்பு என்பது எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை.. எனினும் இந்த மாணவியின் பொதுநலமனு மீது விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications