பொறுமையாயிருங்க... எல்லோருக்கும் தடுப்பூசி தருவோம்... உலக நாடுகளுக்கு சீரம் சி.இ.ஓ. வேண்டுகோள்!
டெல்லி: கொரோனா தடுப்பூசி உற்பத்தியில், மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் தேவைகளுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார்.

அன்புள்ள நாடுகளே, அரசாங்கங்களே, நீங்கள் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்காக காத்திருக்கும்போது, தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனாவை விரட்ட நாடு முழுவதும் கோவாக்சின் கோவிஷில்டு என்ற 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் புனேவில் உள்ள சீரம் நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடனும், லண்டனைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்துடனும் சேர்ந்து 'கோவிஷீல்ட்' என்ற தடுப்பு மருந்தை உற்பத்தி செய்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில், மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் தேவைகளுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்தார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அன்புள்ள நாடுகளே, அரசாங்கங்களே, நீங்கள் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்காக காத்திருக்கும்போது, தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
சீரம் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது. உலகின் பிற பகுதிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய, நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications