4000 ரூபாய் தரும் பிஎம் கேர்ஸ் திட்டம்.. குழந்தைகளுக்கான பிரதமரின் CARES.. மாத மாதம் இத்தனை சலுகைகளா
டெல்லி: குழந்தைகளின் பாதுகாப்புக்கு உதவக்கூடிய பிஎம் கேர்ஸ் திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை மத்திய அமைச்சர் வெளியிட்டிருக்கிறார்.
3 வருடங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் பாதிப்பினால், இந்திய தேசமே பெருமளவு பாதிக்கப்பட்டது.. ஏராளமானோர் உயிரிழந்தனர்.. நாட்டின் பொருளாதார நிலையோ தடுமாற்றம் கண்டது. எனவேதான், தொற்று பாதிப்பின் தடுப்பு பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, 'பிஎம் கேர்' என்ற நிதியுதவிக் கணக்கு தொடங்கப்பட்டது.

தொற்று காரணமாக, பெற்றோர்கள் இருவரையோ, அல்லது உயிருடன் இருந்த பெற்றோரில் ஒருவரையோ, அல்லது சட்டரீதியான பாதுகாவலரையோ, அல்லது தத்தெடுத்த பெற்றோர்களையோ, அல்லது தத்தெடுத்த ஒற்றை பெற்றோரையோ இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டம் மே 29, 2021 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது.
உதவிகள்: இந்த திட்டத்தின்கீழ், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் சாமானியர்கள் என அனைவருமே மனமுவந்து உதவிகளை செய்தார்கள்..
அக்குழந்தைகளின் விரிவான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் அவர்களுக்கு உறைவிட வசதி அளித்தல், கல்வி, உதவித்தொகை மூலம் அவர்களுக்கு அதிகாரமளித்தல், அவர்களுக்கு தன்னிறைவு அளிப்பதற்காக 23 வயது வரை ரூ. 10 லட்சம் நிதி உதவி அளித்தல் மற்றும் மருத்துவ காப்பீடு மூலம் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்தல் போன்றவையே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
நடைமுறைகள்: இதற்காகவே, குழந்தைகளை பதிவு செய்வதற்காக http://pmcaresforchildren.in/ என்ற வெப்சைட்டும் ஆரம்பிக்கப்பட்டது.. ஒப்புதல் நடைமுறைகளுடன் குழந்தைகளுக்கான அனைத்து உதவிகளை வழங்கும் ஒற்றை சாளர அமைப்புமுறையாக இந்த தளம் செயல்பட்டும் வருகிறது.. இந்நிலையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி இதுகுறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.
அதில், "பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் ஆலோசனை, சட்ட உதவி, தொழிற்பயிற்சி போன்ற மருத்துவ சிகிச்சைகள், கோவிட் காலத்தில், 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களால் வீட்டிற்கு எடுத்துசெல்லும் ரேஷன் வழங்கப்பட்டது...
கர்ப்பிணிகள்: அதேபோல, கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பள்ளி செல்லா வளரிளம் பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை அவர்களது வீடுகளிலேயே தங்க வைக்கப்படுகிறது.
சிறார் நீதி சட்டம் - 2015, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் - 2012, குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான உரிமை (RTE) சட்டம் - 2009, போன்றவற்றின் அமலாக்கத்தை கண்காணிக்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) கடமைப்பட்டுள்ளது.
சமூக பொருளாதார வளர்ச்சி: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் குழந்தை தொழிலாளர்களை தடுப்பதற்காகவே, இலவச கல்வி உரிமை மற்றும் பொதுவான சமூகப்பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி வெளியிட்டிருக்கிறார்.
விண்ணப்பம்: பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். மேலும், ஆயுஷ்மான் பாரத் மருத்துவ அட்டையை பயன்படுத்தி 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மாதாந்திர உதவித்தொகையுடன் அவர்களுக்கு 23 வயதாகும் போது ரூ.10 லட்சம் வழங்கப்படும்
இதற்கு https://pmcaresforchildren.in/ என்ற வெப்சைட்டிற்குள் சென்று, குழந்தைகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அரசு ஒப்புதல் கிடைத்தபின் குழந்தைகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக பணம் உள்ளிட்ட திட்டத்தின் பலன்கள் வந்துசேரும்.
சர்ச்சைகைள்: எனினும், பி.எம்.கேர்ஸ் குறித்த சர்ச்சைகள் இன்னமும் அடங்கவில்லை.. உருவாக்கப்பட்டவுடனேயே தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா கலைஞர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என பலருமே முன்வந்து பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளித்தனர். இதில், பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி சேர்ந்ததாக சொல்லப்பட்டது.
ஆனால், எவ்வளவு நிதி பெறப்பட்டது, அதிலிருந்து எவ்வளவு நிதி செலவிடப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் இன்றுவரை கேள்விகளை எழுப்பியவாறே உள்ளன.
அதேபோல, நாடு முழுவதும் இந்த திட்டத்திற்கு 9,331 மனுக்கள் விண்ணப்பிக்கப்பட்டு, அவற்றில் 4,532 மனுக்கள் மட்டுமே ஏற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், 4,781 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், 18 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு வளர்ச்சி அமைச்சகம் சமீபத்தில் தகவல் வெளியிட்டிருந்தது.
கேள்வி : கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வது, நிவாரணங்கள் வழங்குவது என்பதுதான் பி.எம்.கேர்ஸ் நிதியின் முழுமையான நோக்கமாக இருக்கும்போது, பாதிக்கப்பட்ட குழந்தைகள் உதவி கோரி விண்ணப்பிக்கும் மனுக்களை நிராகரிப்பது ஏன்? விண்ணப்பம் நிராகரிப்புக்கான காரணங்களை சொல்லாதது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலரும் இந்த விவகாரத்தில் கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications