சிபிஐ இயக்குநர் பதவி.. ரேஸில் பெண் ஐபிஎஸ் அதிகாரி முதலிடம்.. தேர்வானால் சாதனைதான்!
டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநர் பதவிக்கு பெண் உள்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோருக்கு இடையே அதிகாரப் போட்டி இருந்ததை தொடர்ந்து, அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். அலோக் வர்மாவுக்கு பதிலாக தற்காலிகமாக நாகேஷ்வர ராவ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
நாகேஸ்வரராவின் நியமனத்துக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோர் கொண்ட தேர்வு குழு, சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கே
இதன் ஆலோசனைக் கூட்டம் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்றது. எனினும் எந்தவித முடிவும் எட்டவில்லை. இதையடுத்து நாளை மாலை 6 மணிக்கு இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதை மல்லிகார்ஜுன கார்கே உறுதி செய்தார்.

ரினா மித்ரா
இந்த நிலையில் சிபிஐ இயக்குநருக்கான தேர்வு குழுவினர் பெண் அதிகாரி உள்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 11 பேரில் மத்திய பிரதேசத்தில் 1983-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த ரினா மித்ரா முதலிடத்தில் உள்ளார்.

முதல் பெண் இயக்குநர்
அலோக் வர்மாவுடன் மோதலில் ஈடுபட்ட ராகேஷ் அஸ்தனாவின் பெயரும் அந்த பட்டியலில் உள்ளது. ஒரு வேளை நாளை நடைபெறும் கூட்டத்தில் ரினா மித்ரா தேர்வு செய்யப்பட்டால், சிபிஐயின் முதல் பெண் இயக்குநர் என்ற சாதனையை படைப்பார்.

முடிவு எடுக்கப்படவில்லை
சிபிஐ துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ரினா மித்ரா இதுவரை எந்த சர்ச்சைகளிலும் சிக்கவில்லை. மேலும் கறைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். கடந்த 24-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் சிபிஐ இயக்குநருக்கான ரேஸில் உள்ளவர்கள் தொழில் விவரங்கள், முந்தைய அனுபவம் உள்ளிட்டவற்றை கொடுக்கவில்லை என்பதால் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications