பிரதமர் மோடி என்ன கடவுளா? பாஜக உறுப்பினர்கள் செயலால் டென்ஷன் ஆன கார்கே!
டெல்லி: பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வருவார்.. எதிர்க்கட்சிகளை கிழிக்க போகிறார் என பாஜகவினர் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், டென்ஷன் ஆன மல்லிகார்ஜுன் கார்கே, "மோடி என்ன பாரதமாதாவா, கடவுளா, வரட்டும் பார்த்துக்கொள்கிறோம்.. என்று பேசினார்.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் உள்ளிட்டவை தேசத்தையே உலுக்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி நாடாளுமன்றத்தில் எதுவும் இதுவரை எதுவும் கூறவில்லை.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர். 50 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சபாநாயகரும் ஒப்புதல் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்களாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவதம் நடைபெற்றது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் விவாதத்திற்கு பங்கேற்று பேசினர்.
இன்று பிரதமர் மோடி தனது பதிலுரையை பேசுகிறார். 4 மணியளவில் பிரதமர் மோடி பதிலளித்து பேசுகிறார். இதனிடையே, இன்று ராஜ்யசபாவில் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பாஜக எம்.பிக்கள் தொடர்ந்து குறுக்கிட்டனர். பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வருவார்.. எதிர்க்கட்சிகளை கிழிக்க போகிறார் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனால், டென்ஷன் ஆன மல்லிகார்ஜுன் கார்கே, "மோடி என்ன பாரதமாதாவா, கடவுளா, வரட்டும் பார்த்துக்கொள்கிறோம்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications