8 கோடி விவசாயிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த பிரதமர் மோடி.. வரப்போகுது பணம்.. செக் பண்ணுங்க
டெல்லி: pm kisan விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் மேலான விவசாயிகளுக்கு 15வது தவணைத்தொகையான ரூ.18000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி சமூக போராளி பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் பழங்குடிகள் பெருமை தினத்தையொட்டி இன்று நடைபெறும் கூட்டத்தில் இந்த நிதியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில் பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, விவசாயிகளின் கடனைக் குறைக்க மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முதலாக செயல்படுத்தப்பட்டது. அப்போது முதல் இத்திட்டத்தின் கீழ் 3 தவணையாக தலா 2000 வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள், இத்திட்டத்தில் பயன்பெற முடியும். தமிழகத்தில் கொரோனா காலத்தில், 41 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றனர். ஆனால் இணையதளத்தின் ரகசிய குறியீட்டை தவறாக பயன்படுத்தி விவசாயிகள் அல்லாத பலர் முறைகேடாக உதவித்தொகை பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே இப்படியான முறைகேடுகள் நடந்தது.இதனால விவசாயிகள் உதவி தொகை விவகாரத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கென தனி இணைய தளத்தை உருவாக்கிய மத்திய அரசு, முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் விடுவித்து வருகிறது. தமிழ்நாட்டில அதன்பிறகு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உதவி தொகை வாங்கப்பட்டு. சுமார் 20 லட்சம் விவசாயிகள் வரை தமிழகத்தில் இன்னமும் விண்ணப்பிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியா முழுவதும் சுமார் 18 கோடி விவசாயிகளுக்கு இந்த உதவி தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 14வது தவணை விடுவிக்கப்பட்ட நிலையில், 15வது தவணை இன்று விடுவிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் இதுவரை 14 தவணைகள் மூலம் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.2.59 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. 14-ஆவது தவணையான ரூ.17,000 கோடி கடந்த ஜூலை மாதத்தில் விடுவிக்கப்பட்டு 8.5 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள்
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி சமூக போராளி பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் பழங்குடிகள் பெருமை தினத்தையொட்டி இன்று நடைபெறும் கூட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 15-ஆவது தவணைத் தொகையான ரூ.18,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார். எனவே விவசாயிகள் கணக்கிற்கு 2000 ரூபாய் பணம் வந்துவிடும்..
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications