Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய நாடாளுமன்றம்- உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 3-வது நாடு: ராஜ்யசபாவில் மோடி உரை- 10 அம்சங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிட காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 3-வது நாடாக திகழும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ராஜ்யசபாவில் பிரதமர் மோடி நேற்று ஆற்றிய உரையின் 10 முக்கிய அம்சங்கள்:

PM Modi addresses Rajya Sabha in New Parliament Building

- நாட்டுக்கு வழிகாட்டும் அதே வேளையில், அரசியல் உரையாடல்களின் ஏற்ற இறக்கங்களுக்கு அப்பால் எழும் தீவிர அறிவுசார் விவாதங்களின் மையமாக அவை மாற வேண்டும்

- நாடாளுமன்றம் என்பது வெறுமனே சட்டம் இயற்றும் அமைப்பு அல்ல, அது விவாத அமைப்பு. மாநிலங்களவையில் தரமான விவாதங்களைக் கேட்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது

- நாடாளுமன்ற கண்ணியம் தொடர்பாக, நாடு முழுவதிலும் உள்ள சட்ட மன்றங்களுக்கு இந்த அவை உத்வேகம் அளிக்கும்.

- ஜனநாயக அமைப்பில் ஆட்சிகளில் மாற்றம் ஏற்பட்ட போதும், தேசநலனை முதன்மையாக வைத்திருக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

- கூட்டுறவு கூட்டாட்சியை வலியுறுத்தும் நேரத்தில், நாடு பல முக்கியமான விஷயங்களில் பெரும் ஒத்துழைப்புடன் முன்னேறியுள்ளது.கொரோனா பெருந்தொற்று மத்திய-மாநில அரசுகளின் ஒத்துழைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

- புதிய கட்டிடம் கட்டும் திட்டத்தில் மாநிலங்களின் கலைப்பொருட்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளதால் புதிய கட்டிடம் கூட்டாட்சி உணர்வைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

- அரசியல் நிர்ணய சபையில், நாம் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடினோம். 2047 ஆம் ஆண்டில் சுதந்திரத்தின் நூற்றாண்டு புதிய கட்டிடத்தில் கொண்டாடப்படும்போது, அது வளர்ச்சியடைந்த இந்தியாவில் ஒரு கொண்டாட்டமாக இருக்கும்

- புதிய நாடாளுமன்றத்தில், உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒரு பகுதியாக நாம் இருப்போம் என்று நான் நம்புகிறேன்

- பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளைப் படிக்கவைப்போம் திட்டம் மக்கள் திட்டமாக மாறியுள்ளது. உஜ்வாலா, முத்தலாக் ஒழிப்பு ஆகியவை பெண்களின் பாதுகாப்புக்கு வலுவான சட்டங்கள்.

- பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறும்; புதிய கட்டிடத்தின் புதிய ஆற்றலுடன் தேசத்தைக் கட்டமைப்பதில் 'நாரி சக்தியை' உறுதி செய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+