6ஆம் கட்ட தேர்தல்..கண்டிப்பாக ‘இதை’ செய்ய மறக்காதீங்க..! தேர்தல் நாளில் பிரதமர் மோடி வைத்த கோரிக்கை
டெல்லி: 18வது மக்களவைக்கான 6ஆம் கட்ட தேர்தல் இன்று 8 மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 58 தொகுதிகளில் நடைபெறும் நிலையில், தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ளார்.
இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்து இன்றும், ஜூன் 1ஆம் தேதியும் இரண்டு கட்ட தேர்தல்கள் நடக்கிறது.

ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது இந்திய ஜனநாயகத்தின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
மக்களவை தேர்தல்: ஏற்கனவே 28 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, ஏப்ரல் 13, மே 20ஆ தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து மே 25ஆம் தேதியான இன்று 6ஆம் கட்டத் தேர்தலை காங்கிரஸ் - பாஜக கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் எதிர்கொள்கின்றன. நேற்று முன் தினம் அப்பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், இன்று தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தி வருகிறது.
6ஆம் கட்ட தேர்தல்: ஆறாம் கட்ட தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானா மாநிலத்தில் பத்து தொகுதிகளுக்கும், பீகார் மாநிலத்தில் எட்டு தொகுதிகளுக்கும், தலைநகர் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் நான்கு ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கு என காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
889 வேட்பாளர்கள்: ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்-ரஜோரி தொகுதியில் மூன்றாம் கட்டத்தின் போது வாக்குப்பதிவு நடைபெற இருந்தது இந்த நிலையில் அங்கு கடும் பனி பொழிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் ஆறாம் கட்ட தேர்தலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த தொகுதியில் மட்டும் 20 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அதேபோல மற்ற மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கும் 1900-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு பரிசீலனையில் 900 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் வாபஸ் பெற்றோர்களை தவிர்த்து களத்தில் தற்போது 889 வேட்பாளர்கள் நிற்கின்றனர்.

முக்கிய தொகுதிகள்: ஆறாம் கட்ட தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற தொகுதிகளாக டெல்லி, வடகிழக்கு டெல்லி, புதுடெல்லி , வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, வால்மீகி நகர், குருஷேத்ரா, பரிதாபாத், புவனேஸ்வர் அலகாபாத், விஷ்ணுபூர், சுல்தான் பூர் உள்ளிட்ட தொகுதிகள் இருக்கின்றன.
நரேந்திர மோடி: இந்நிலையில் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர்," 2024 லோக்சபா தேர்தலில் 6வது கட்டமாக வாக்களிக்கும் அனைவரையும் அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது, உங்களுடையதையும் எண்ணுங்கள்! ஜனநாயகம் அதன் மக்கள் தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டு சுறுசுறுப்பாக இருக்கும் போது செழிக்கும். குறிப்பாக பெண் வாக்காளர்கள் மற்றும் இளைஞர் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications