Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்போனில் டார்ச் அடித்து நன்றி சொல்லுங்க.. வடகிழக்கு மாநில தேர்தல் வெற்றியால் பிரதமர் மோடி உற்சாகம்

பாஜக தொண்டர்கள் இருந்தால் எதுவுமே சாத்தியம் அற்றது கிடையாது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி இன்று கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, வடகிழக்கு மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அடையாளமாக செல்போனில் பிளாஷ் லைட் அடிக்குமாறு கட்சியினரை கேட்டுக்கொண்டார். அதேபோல், பிரதமர் மோடி உரையாற்ற வரும் போது மோடி மோடி என கட்சி தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகலாயா மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில், திரிபுரா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றது.

நாகலாந்து மாநிலத்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இங்கும் பாஜக கூட்டணியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது.

மோடி மோடி என கோஷம்

மோடி மோடி என கோஷம்

இதேபோல், மேகலயாவில் தொங்கு சட்ட சபை அமைந்ததால், தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. இதனால் வடகிழக்கு மாநிலங்கள் மூன்றிலும் ஆட்சியில் பாஜக பங்கு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தேர்தல் வெற்றி உரையாற்றினார். அப்போது கட்சி அலுவலகத்தில் திரண்டு இருந்த பாஜக தொண்டர்கள் மோடி மோடி என கோஷம் எழுப்பினர்.

பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி உரை

அவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, வடகிழக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செல்போனில் லைட் அடித்து காட்டுமாறு அரங்கத்தில் திரண்டு இருந்தவர்களை கேட்டுக்கொண்டார். அதன்படி பாஜகவினரும் தங்கள் செல்போனில் உள்ள டார்ச் லைட்களை அடித்து காட்டினர். தொடர்ந்து பிரதமர் மோடி வடகிழக்கு மாநில மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- எங்களது திட்டங்களால் பாஜக மீதான நம்பிக்கை வடகிழக்கு மாநில பெண்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. திரிபுராவில் உள்ள பெண்கள் மற்றும் மகள்கள் பாஜகவிற்கு முழு மனதுடன் ஆதரவு கொடுத்துள்ளனர்.

நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

நாகலாந்து மாநிலத்தில் இருந்து முதல் முறையாக பெண் ஒருவர் சட்ட சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதில் நமது கட்சியினர் ஒரு போதும் சோர்வு அடைவது இல்லை. பாஜக தொண்டர்கள் இருந்தால் எதுவுமே சாத்தியம் அற்றது கிடையாது. கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நமது அரசும் மக்களும் ஒரே நேரத்தில் வறுமைக்கு எதிராக போராடி வருகின்றனர்.

 70 ஆண்டுகள் ஆகியும்..

70 ஆண்டுகள் ஆகியும்..

ரயில்வே மற்றும் விமான நிலையங்கள் வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் கடினமான டாஸ்க் ஆக பார்க்கப்பட்டது. ஆனால், நமது முயற்சியால் பலன் கிடைத்தது. சமையல் எரிவாயு இணைப்பு, வீடுகள் உள்ளிட்ட பிற வசதிகளுக்கு முந்தைய அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 70 ஆண்டுகள் ஆகியும் வடகிழக்கு மாநிலங்களில் மின்சார வசதி இன்றி இருந்தது. பிற மாநிலங்களை போலவே வடகிழக்கு மாநிலங்களை போலவே முக்கியத்துவம் கிடைக்க வேண்டும்.

வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான..

வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான..

பாஜக எப்படி தேர்தலில் வெற்றி பெறுகிறது என்று நினைத்து பார்த்து நமது எதிரிகளுக்கு வயிறு வலிக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள் என்றால் தேர்தல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் என்றே மக்கள் நினைத்த ஒரு காலம் இருந்தது. நமது மனதில் இருந்தும் டெல்லியில் இருந்தும் தொலை தூரத்தில் வடகிழக்கு மாநிலங்கள் இல்லை. வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான தருணம் இதுவாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+