லோக்சபா சபாநாயகர் யார்? மோடி ‛டிக்’ அடிக்கப்போகும் பிரபல நடிகரின் மகள்.. யார் இவர் தெரியுமா?
டெல்லி: மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில் லோக்சபா சபாநாயகர் பதவிக்கு கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமாரின் கட்சிகள் கண்வைத்துள்ளனர். இந்நிலையில் தான் பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடுக்கு ‛செக்' வைக்கும் வகையில் ஆந்திர மாநில பாஜக தலைவரும், மறைந்த நடிகருமான என்டி ராமராவின் மகள் டகுபதி புரண்டேஸ்வரியை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் ஒரு கட்சி 272 இடங்களில் வெற்றி பெற்றால் மத்தியில் தனித்து ஆட்சியை பிடிக்கலாம். ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

240 தொகுதிகளில் வென்ற பாஜக தனது கூட்டணியில் உள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் 16 எம்பிக்கள், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 12 எம்பிக்கள் உள்பட கூட்டணியில் உள்ள 52 எம்பிக்களின் உதவியுடன் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்து 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராகி உள்ளார்.
மொத்தம் 72 பேர் மத்திய அமைச்சர்களாகி உள்ளனர். இதில் தெலுங்கு தேசம் கட்சி 4 கேபினட் பொறுப்பு, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 3 கேபினட் பதவிகளை கேட்டது. ஆனால் பாஜக சார்பில் தலா 2 கேபினட் அமைச்சர் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் லோக்சபா சபாநாயகர் பதவி மீது சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் ஆகியோர் கண்வைத்துள்ளனர்.
கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் லோக்சபா பதவியை ஒதுக்க இருவரும் பாஜக மேலிடத்திடம் வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜக லோக்சபா சபாநாயகர் பதவியை விட்டு கொடுக்க விரும்பவில்லை. ஏனென்றால் கூட்டணி அரசை பொறுத்தவரை எப்போது வேண்டுமானாலும் மற்ற கட்சிகள் ஆதரவை விலக்கலாம். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சபாநாயகர் தான் முக்கிய பங்கு வகிப்பார். அதேபோல் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழான நடவடிக்கைகளின்போது சபாநாயகர் முடிவே இறுதியானது. சொல்லப்போனால் அந்த நேரத்தில் ஒரு ஆட்சியை கலைப்பதும், காப்பாற்றுவதும் சபாநாயகரின் கையில் தான் இருக்கும்.
இதனால் தான் பாஜகவை நம்பாமல் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் சபாநாயகர் பதவி மீது கண்வைத்துள்ளனர். ஆனால் பாஜகவோ சபாநாயகர் பதவியை விட்டு கொடுக்க விரும்பாமல் உள்ளது. இந்நிலையில் தான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதாவது ஆந்திர மாநில பாஜக தலைவராக உள்ள டகுபதி புரண்டேஸ்வரியை லோக்சபா சபாநாயகராக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இவர் தற்போது ஆந்திராவின் ராஜமுந்திரி லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் யார் என்றால் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிய நடிகரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான என்டி ராமராவின் மகள் ஆவார். மேலும் இவர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருங்கிய உறவினர். அதாவது டகுபதி புரண்டேஸ்வரியின் சகோதரியை தான் சந்திரபாபு நாயுடு திருமணம் செய்துள்ளார். மேலும் என்டி ராமராவிடம் மருமகன் சந்திரபாபு நாயுடு அபகரித்து தலைவரானார்.
இதனால் டகுபதி புரண்டேஸ்வரி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் பேசுவதை தவிர்த்தனர். டகுபதி புரண்டேஸ்வரி காங்கிரஸ் கட்சியில் இணைந்து 2 முறை எம்பியான பிறகு கடந்த 2014ல் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் தற்போது மாநில தலைவராகவும், எம்பியாகவும் உள்ளார்.
ஆந்திராவில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து களமிறங்கியது. இந்த வேளையில் சந்திரபாபு நாயுடு மற்றும் டகுபதி புரண்டேஸ்வரி ஒன்றாக பிரசாரம் செய்யவில்லை. தேசிய தலைவர்கள் வந்தபோது மட்டும் மரியாதை நிமித்தமாக ஒரே மேடையில் அவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் தான் டகுபதி புரண்டேஸ்வரியை பாஜக சார்பில் சபாநாயகராக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளாராம்.
இதன்மூலம் தனது கட்சிக்கு சபாநாயகர் பொறுப்பு கேட்கும் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தை சேர்ந்தவருக்கு சபாநாயகர் பதவி வழங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் டகுபதி புரண்டேஸ்வரி பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பார். அதேவேளையில் மனைவியின் சகோதரி என்பதால் சபாநாயகர் பதவிக்கு வழங்க கூடாது என சந்திரபாபு நாயுடுவும் எதிர்க்க மாட்டார் என பாஜக மேலிடம் கணக்கிடுகிறது. ஏனென்றால் சமீபத்திய லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலின்போது சந்திரபாபு நாயுடு - டகுபதி புரண்டேஸ்வரி இடையேயான உறவில் நெருக்கம் காணப்படுகிறது.
ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சந்திரபாபு நாயுடு 2 முறை பொது மேடையில் டகுபதி புரண்டேஸ்வரிக்கு வெளிப்படையாகவே பாராட்டு தெரிவித்தார். இதனை பாசிட்டிவ் சைனாக பார்த்து பாஜக டகுபதி புரண்டேஸ்வரியை சபாநாயகராக்கி அந்த பதவியை தனது கட்சியின் வசமே வைக்க திட்டமிட்டுள்ளது. அதேவேளையில் நிதிஷ் குமாரின் ஐக்கியஜனதாதளம் கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியை பிரதமர் மோடி வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரே கல்லில் சபாநாயகர் பதவியை தன்வசம் வைக்கவும், சந்திரபாபு நாயுடுவை சமாதானம் செய்யவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!











Click it and Unblock the Notifications