Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலில் விழுந்த வானதி சீனிவாசன்.. சட்டென மாறிய பிரதமர் மோடியின் முகம்.. அடுத்து என்ன நடந்தது! வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரதமர் நரேந்திர மோடி காலில் விழுந்து வணங்கினார். அப்போது பிரதமர் மோடியின் ரியாக்ஷன் தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் ரொம்பவே குறைவாக இருக்கிறது. இந்த பிரச்சினையைச் சரி செய்து பெண்களை நிர்வாகத்திற்குள் கொண்டு வர 33% இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி தர வேண்டும் என பல்வேறு கட்சிகளும் பலரும் வலியுறுத்தி வந்தனர்.

 PM Modi got angry as BJP MLA Vanathi Srinivasan touched his feet on 33% reservation row

இது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் சுமார் 27 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இதற்கிடையே இந்த மசோதா நாடாளுமன்ற சிறப்புக் கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கருத்துக்களைக் கூறி வருகின்றனர்..

வானதி சீனிவாசன்: இதற்கிடையே இந்த மசோதாவைக் கொண்டு வந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் பாஜக மகளிர் அணி சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வந்த பிரதமர் மோடிக்கு பாஜக மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து, பூக்களைத் தூவியும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அதைப் பிரதமர் மோடி சிரித்த முகத்தோடு ஏற்றுக் கொண்டார்.

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவவும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது திடீரென பிரதமர் மோடி காலில் விழுந்து வானதி சீனிவாசன் ஆசீர்வாதம் பெற முயன்றார். இதைக் கவனித்த பிரதமர் மோடி சட்டென பின்னால் நகர்ந்தார்.

கடுப்பான பிரதமர் மோடி: வானதி சீனிவாசன் காலில் விழுந்த உடன் பிரதமர் மோடியின் முகமும் மாறியது. இதனால் கடுப்பான பிரதமர் மோடி, இதுபோல காலில் விழக் கூடாது என்பது போல வானதி சீனிவாசனை நோக்கி அறிவுரை கூறினார். இதே நிகழ்ச்சியில் மேடையிலும் சில மகளிர் அணி நிர்வாகிகள் பிரதமர் மோடி காலில் விழுந்த நிலையில், அப்போது பிரதமர் மோடி அவர்களின் காலை பதிலுக்குத் தொட்டு வணங்கியது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அரசியல் தலைவர்களின் காலில் விழும் கலாச்சாரத்தை எதிர்க்கும் ஒரு நபராகவே பிரதமர் மோடி இருக்கிறார். கடந்த காலங்களிலும் பல முறை அவர் தனது காலில் விழ முயல்பவர்களைத் தடுத்துள்ளார். அதையும் தாண்டி யாராவது அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டால், பதிலுக்குப் பிரதமர் மோடியும் அவர்கள் காலை தொட்டு வணங்கிவிடுவார். அதுபோலவே தான் இன்றும் நடந்துள்ளது.

33% இட ஒதுக்கீடு மசோதா: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்த 27 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. கடந்த 2010இல் இது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், லோக்சபாவில் இது தாக்கலாகவில்லை. இந்த மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கும். லோக்சபாவில் இருவர் மட்டுமே இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், ராஜ்யசபாவில் ஒருமனதாக இந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேறினாலும் கூட இது உடனடியாக அமலுக்கு வராது. அடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பின்னர் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு, அதன் பின்னரே இந்த 33% மசோதா அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+