”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..” தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து
டெல்லி: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருக பக்தர்களுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தைப்பூச திருவிழா முருக பெருமான் கோவில்களில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள பழனி, திருச்செந்தூர் உள்பட முருகனின் அறுபடை வீடு கோவில்களில் தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் முருக பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர்.

பழனி, திருச்செந்தூர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக கோயிலில் குவிந்துள்ளனர்.
இதற்கிடையே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும் என தமிழில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டு இருப்பதாவது:- அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!

முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications