அசாமில் திறக்கப்பட்ட புதிய நெடுஞ்சாலை.. போர் விமானத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடி!

Subscribe to Oneindia Tamil

கவுகாத்தி: அசாமில் இன்று பிரதமர் மோடி போர் விமானங்கள் அவசர காலத்தில் தரையிறங்க ஏதுவாக ரூ.100 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். இந்த சாலையில் போர் விமானத்தில் முதல் முறையாக வந்து பிரதமர் மோடி தரையிறங்கி திறந்து வைத்தார். இந்திய விமானப்படையின் C-130J விமானத்தில் பிரதமர் பயணம் செய்தார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், போர் விமானங்கள் அவசர காலத்தில் தரையிறங்க ஏதுவாக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள இத்தகைய முதல் சாலை இதுவாகும்.

PM Modi Inaugurates Emergency Landing Facility on Assam Highway

விமானத்தில் பிரதமர் மோடி பயணம்

அசாமின் மோரானில் உள்ள தேசியநெடுஞ்சாலையில் உள்ள அவசரகால வசதியில் (Emergency Landing Facility-ELF) போர் விமானம் தரையிறங்கியது. இந்த சாலையில் போர் விமானத்தில் முதல் முறையாக வந்து பிரதமர் மோடி தரையிறங்கி திறந்து வைத்தார்.

ஒரு நாள் பயணமாக அசாம் வந்து இருந்த பிரதமர் மோடி, சாபுவாவில் இருந்து விமானம் மூலமாக, தரையிறங்கும் வசதிக்குச வந்தார். இந்திய விமானப்படையின் C-130J விமானத்தில் பிரதமர் பயணம் செய்தார். மோரன் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த வசதி, ரூ.100 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 4.2 கிமீ நீளம் கொண்டதாக இதுஅமைக்கப்பட்டுள்ளது.

ரபேல் விமானங்கள், ஹெலி காப்டர்கள்

அவசர தரையிறங்கும் வசதியை பிரதமர் மோடி திறந்து வைத்த பிறகு போர் விமானங்கள், போக்கு வரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இடம்பெற்ற இந்திய விமானப்படையின் வான் வழி காட்சி நடந்தது. இதை பிரதமர் மோடி கண்டு ரசித்தார். இதில் ரபேல் உள்ளிட்ட விமானங்கள், ஹெலி காப்டர்கள் அவசரக்கால தரையிறங்கும் சாலையில் இருந்து புறப்பட்டு சென்றன.

இந்நிகழ்ச்சியில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, விமானப் படைத் தளபதி ஏ.பி. சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி திப்ருகரில் இருந்து சி-130 விமானத்தில் கவுகாத்திக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ரூ.3,030 கோடி செலவில் கட்டப்பட்ட குமார் பாஸ்கர் வர்மா சேதுவை திறந்து வைக்கிறார்.

மோடி போட்ட ட்வீட்

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:- வடகிழக்கு இந்தியாவுக்கு அவசர விமான தரையிறக்க வசதி (Emergency Landing Facility) கிடைத்திருப்பது மிகுந்த பெருமைக்குரிய விஷயமாகும். ராஜாங்க ரீதியான முக்கியத்துவத்துடனும், இயற்கை பேரிடர் காலங்களில் அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்குமான பார்வையிலும், இந்த வசதி மிகுந்த அவசியமும் முக்கியத்துவமும் கொண்ட ஒன்றாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

74 டன்கள் வரை டேக் ஆஃப் செய்யலாம்

சிவில் மற்றும் ராணுவம் என இரண்டிற்குமே பயன்படுத்தக் கூடிய வகையில் இந்த அவசர இறங்கு தள வசதி உருவாக்கப்பட்டுள்ளது. திப்ருகார் விமான நிலையத்தில் ஏதேனும் அவசர காலம் ஏற்பட்டால் இந்த விமான நிலையத்தில் தரையிறக்க முடியும்.

இந்த சாலையில் 40 டன்கள் எடை கொண்ட போர் விமானங்கள் மற்றும் 74 டன்கள் எடை கொண்ட போக்குவரத்து விமானங்கள் டேக் ஆப் செய்ய முடியும். இந்தியாவின் முதல் அவசரகால இறங்கு தள வசதியுடன் கூடிய சாலை ராஜஸ்தானின் பார்மரில் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+