Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்மாவுக்கு மாரடைப்பு.. மருத்துவமனை செல்லாமல் ஜி20 பாதுகாப்பை கவனித்த போலீஸ்.. பிரதமர் மோடி பாராட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தாய்க்கு மாரடைப்பு ஏற்பட்ட போதிலும், ஜி20 - மாநாட்டில் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈட்டுப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

உலகின் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமே ஜி20 அமைப்பாகும். இந்த கூட்டமைப்பில் தலைவர் பதவி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிற்கு வழங்கப்படும். அதன்படி இந்தியாவுக்கு இந்தாண்டு தலைமை பொறுப்பு கிடைத்தது.

 PM Modi lauds Police who worked at Bharat Mandapam on G20 despite mothers heart attack

ஜி20 மாநாடு: இதன் காரணமாக இந்தாண்டு முழுக்க இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் பல ஜி20 கூட்டங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இறுதியில் டெல்லியில் இம்மாத தொடக்கத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்தன. குறிப்பாக டெல்லி பிரகடனம் அனைத்து நாடுகளின் சம்மதத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல இந்த ஜி20 கூட்டமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியமும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த ஜி20 மாநாட்டிற்காகப் பல உலக தலைவர்கள் டெல்லிக்கு வந்த நிலையில், அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கே பல ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ் அதிகாரி: அப்படி இந்த ஜி20 மாநாட்டிற்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த போலீசாரில் ஒருவர் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார்.. இவர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறும் அரங்கில் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அப்போது தான் வீட்டில் தனது தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக இவருக்குக் கால் வந்துள்ளது. இருப்பினும், அவர் வீட்டில் உள்ளவர்களைத் தாயாரைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு மருத்துவமனைக்குச் செல்லாமல் பாதுகாப்புப் பணியைத் தொடர்ந்துள்ளார்.

மோடி பாராட்டு: வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடந்த முடிக்க ஊழியர்களுக்குப் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அப்போது தான் இந்த காவலர் தனக்கு நேர்ந்த இந்தச் சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவரது செயலைப் பாராட்டிய பிரதமர் மோடி, ஜி20 நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்தி முடிக்க உதவிய அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடி நேற்று வாரணாசியில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தான் இந்தச் சம்பவம் நடந்தது. மேலும், வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, சமீப காலமாக விளையாட்டுத் துறையில் இந்தியா பெற்ற வெற்றிகளை எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

33% இட ஒதுக்கீடு: மேலும், இந்த நிகழ்வில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவை நிறைவேற்றியதற்காக நாட்டில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் , பெண்கள் தலைமை எப்போதும் வலிமையானது என்பதை இது நிரூபிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "பெண்கள் தலைமை தாங்குவது உலகின் மற்ற பகுதிகளுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் நாங்கள் முதலில் எப்போதும் அன்னை பார்வதியையும் கங்கையையும் வணங்கும் மக்கள் நாங்கள். இங்குச் சிலருக்கு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததில் பிரச்சினை இருக்கிறது. அவர்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+