சவுத் பிளாக் அறையில்.. லைவில் உடனுக்குடன் தாக்குதலை "கவனித்த" மோடி.. பதறிய வார் ரூம்!
டெல்லி: பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா பிரதமர் மோடி உடனுக்குடன் கண்காணித்து வருகிறார். தாக்குதல் நடத்தப்பட்ட போது இதை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார்.
பொதுவாக இந்தியா போருக்குச் சென்றால், பிரதமர் மோடி டெல்லியில் உள்ள சவுத் பிளாக் வளாகத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பான செயல்பாட்டு மையத்திலிருந்து நிலைமையைக் கண்காணிப்பார். இது பிரதமர் அலுவலகம் (PMO), பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற முக்கிய அரசுத் துறைகளைக் கொண்டு அறை ஆகும்.
இந்த அறையில் பின்வரும் வசதிகள் அடங்கும்:
1. தேசிய கட்டளை மையம் / அணுசக்தி கட்டளை ஆணையம் இங்கே அமைந்துள்ளது.
2. இந்தியாவின் அணு ஆயுதத்தை நிர்வகிக்கும் சக்தி கொண்ட (SFC) உள்கட்டமைப்பு இங்கே உள்ளது. ஆனால் இங்கே ரகசிய இடத்தில் அந்த அமைப்பு உள்ளது.
3. பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுதப்படைகள், RAW (இந்தியாவின் வெளிப்புற உளவுத்துறை), NSA மற்றும் DRDO ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பான தகவல்களை பெற சிறப்பு ரேடியோ தொடர்புகள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன.
4. சவுத் பிளாக்கிற்கு அருகில் இன்னொரு அறையில் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் தலைமையகம், செயற்கைக்கோள்கள், விமானப்படை நடவடிக்கைகள், கடற்படை கட்டளைகள் அமைப்பு அமைந்து உள்ளது.
5. இதை ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் (IDS) என்று அழைப்பார்கள். ஒரே இடத்தில் இருந்து அனைத்து படைகளுக்கும் உத்தரவிட முடியும்.
6. போர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது 24/7 செயல்படும் மற்றும் எந்தவொரு தேசிய பாதுகாப்பு நெருக்கடியின் போதும் இங்கேதான் மோடி இருப்பார் . .
7. தேசிய நெருக்கடி மேலாண்மை குழு (NCMC) அறை & situation அறை,
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அறை மற்றும் பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு (CCS) அறை இங்கே அமைந்து உள்ளது.
இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்ட போது பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இந்தியா பிரதமர் மோடி உடனுக்குடன் கண்காணித்து உள்ளார். இங்கே இருக்கும் வார் ரூமில் இருந்தே மோடி ஆபரேஷன்களை உடனுக்குடன் கண்காணித்து இருக்கிறார்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஐந்து இடங்களில் இந்தியாவின் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த முறை இந்தியாவில் இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடித்தியது இந்திய ராணுவம்.
அந்த இடங்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. கோட்லி, அகமதுபூர் கிழக்கு, முசாபராபாத், பாக் மற்றும் முரிட்கே ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன. இவற்றில், அகமதுபூர் கிழக்கு மற்றும் முரிட்கே ஆகியவை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இடங்கள் ஆகும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் தாக்க வேண்டும். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் சிந்துவில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் பஞ்சாப்பில் அடிக்காத வரை, ராவல்பிண்டியில் அடிக்காத வரை எதுவும் ஆகாது. அதற்கெல்லாம் நம்மிடம் பவர் இருக்கிறது.
இதையடுத்தே இந்தியா துல்லியமாக பாகிஸ்தான் உள்ளே.. முக்கியமாக பாகிஸ்தான் பஞ்சாப்பில் இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளது. அங்கே உள்ள பயங்கரவாத தீவிரவாத மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த தாக்குதல் மூலம் 12 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications