அமெரிக்கா ஒப்பந்தம் குறித்து பேசுகிறார்கள்.. போபர்ஸ் ஒப்பந்தம் குறித்தும் பேசுவோமா? பிரதமர் மோடி!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது. இதில் சீனா ஆக்கிரமிப்பு தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ராகுல் காந்தி பேசினார்.
ஆனால் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களே எழுந்து நின்று ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேச பிரதமர் மோடி லோக்சபாவுக்கு வரவில்லை. இருந்தாலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே காங்கிரஸ் பெண் எம்பிக்கள் பிரதமரை தாக்க திட்டமிட்டதாக சபாநாயகர் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார். அதில் பிரதமர் மோடி பேசும்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து முழக்கமிட்டதால், பிரதமர் மோடியால் பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் என்னை பேசவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
பின்னர் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் மோடி பேசுகையில், வெளிநாடுகளில் வயதானவர்கள் அதிகம் இருக்கின்றனர். இந்தியாவில் இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். இந்தியா இன்று பொருளாதார வளர்ச்சியில் 3வது இடத்தில் உள்ளது. சிறு குறு நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்காக பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளோம்.
ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுடன் இந்தியா செய்த ஒப்பந்தத்தை உலக நாடுகள் வரவேற்கின்றன. எனது ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகளை சரி செய்வதிலேயே நேரம் போய்விடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தொலை நோக்கு பார்வையில்லை. இந்தியா செய்துள்ள ஒப்பந்தத்தால் இளைஞர்கள் பயனடைவர்.
இந்திய வளர்ச்சியை பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்திருக்கின்றன. மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த கட்சிகளும் தரம் தாழ்ந்து நடந்து கொள்கின்றன. காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் கடனில் மூழ்கி இருந்தன. தற்போது வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. வங்கிகளின் வாராக்கடன் தற்போது ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துவிட்டது.
மத்தியில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்த போது அவர்களின் பாக்கெட்டை மட்டுமே நிரப்பின. எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை டீல் என்றால் அது ஃபோபர்ஸ் தான். நாங்கள் போட்ட ஒப்பந்தம் குறித்து பேசுகிறார்கள். காங்கிரஸ் ஒப்பந்தம் குறித்து பேசுவோமா? இந்தியா குறித்து எதிர்க்கட்சிகளுக்கு ஒருபோதும் கவலை இருந்ததே கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications