இந்திய அணியின் 'கம்பேக்' வெற்றி நமக்கான வாழ்க்கைப் பாடம் - பிரதமர் மோடி
டெல்லி: தோல்வியில் இருந்து மீண்டு வந்த இந்திய அணியின் வெற்றி, நம் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான பாடம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என இந்திய அணி வென்றது என்பது வரலாற்றுச் சாதனையாக அமைந்தது. இந்தியா 4-0 என தோற்கும் என்று சூளுரைத்தவர்களுக்கு சரியான பதிலடியும் கொடுக்கப்பட்டது.

அணியின் முன்னணி வீரர்கள் பெரும்பாலானோர் காயத்தால் அடுத்தடுத்து போட்டியில் இருந்து வெளியேற, இரண்டாம் தர வீரர்களை வைத்து கோப்பையை வென்று வந்திருக்கிறது இந்திய அணி.
இந்நிலையில், அசாமில் உள்ள டெஸ்பூர் பல்கலையில் இறுதியாண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள் மத்தியில் வீடியோ கான்ஃபரசிங் வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த தருணத்தில் நாட்டின் செயல்பாட்டையும், இந்திய கிரிக்கெட் அணியின் 2-1 என்ற ஆஸி.,க்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியையும் அவர் ஒப்பிட்டு பேசினார்.
"தொற்றுநோயின் தொடக்கக் காலத்தில், என்ன நடக்கப் போகிறதோ என்று மக்கள் அச்சத்தில் இருந்தனர், ஆனால் நாம் தீர்வுகளைக் கண்டறிந்து கொரோனாவை எதிர்த்துப் போராடினோம். முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட நமது தடுப்பூசிகள் நம் விஞ்ஞானிகள் மீதான நம்பிக்கையின் விளைவாகும்" என்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் குறித்து பெருமையுடன் பிரதமர் மோடி பேசினார்.
"நாம் 75வது சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம். இப்போது நீங்கள் ஒரு புதிய இந்தியாவுக்காக (தன்னம்பிக்கை கொண்ட இந்தியா) வாழ வேண்டும். இந்த ஆண்டு முதல் 100வது சுதந்திர ஆண்டு வரை, இந்த நாட்டின் இளைஞர்களுக்கு பொற்காலமாக இருக்கும்.
நேர்மறையான விளைவுகளுக்கு நேர்மறையான மனநிலை முக்கியமானது. இதுவே தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவின் சாராம்சம் என்றும்" மோடி கூறினார்.
"பல சவால்களை எதிர்கொண்ட நமது கிரிக்கெட் அணி (மனநிலையின் மாற்றத்திற்கு) மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. நாம் முதல் போட்டியில் மோசமாக தோற்றோம். ஆனால், நாம் மீண்டும் போராடி சவாலான சூழ்நிலையில் வென்றோம். நமது கிரிக்கெட் அணிக்கு குறைந்த அனுபவமே இருந்த போதிலும், அதிக அளவில் இருந்த நம்பிக்கை புதிய வரலாற்றை உருவாக்கியது.
நமது கிரிக்கெட் அணியின் வெற்றி ஒரு பெரிய வாழ்க்கைப் பாடம். நமது மனநிலையை நேர்மறையாக மாற்ற வேண்டும்" என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications