Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாபெரும் போராட்டம்! மத்திய அரசுக்கு எதிராக.. களத்தில் குதிக்கும் பிரதமரின் சகோதரர் பிரஹலாத் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி, மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட உள்ளார்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அகில இந்திய நியாய விலைக் கடை டீலர்கள் கூட்டமைப்பு (All India Fair Price Shop Dealers' Federation) செயல்பட்டு வருகிறது. இவர்கள் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்த அனைத்து கோரிக்கைகளையும் வரும் ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றும்படி வலியுறுத்தி உள்ளனர். அப்படியில்லை என்றால் ஆகஸ்ட் 2ஆம் தேதி மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.

 கூட்டமைப்பு

கூட்டமைப்பு

நியாய விலைக் கடைகள் (Fair price shops) என்பது ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை போன்ற அத்தியாவசியப் பொருட்களை வங்க உரிமம் பெற்ற கடைகள் ஆகும். பொது விநியோக திட்டம் மூலம் பசியற்ற இந்தியாவைப் படைப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும். கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்ப இந்தக் கடைக உரிமையாளர்களுக்கு கமிஷன் கிடைக்கும்.

கமிஷன்

கமிஷன்

கடந்த 10 ஆண்டுகளாகவே தங்களுக்கு வழங்கப்படும் கமிஷனை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், "முதலில் 1 கிலோ ரேஷனுக்கு 70 பைசா கமிஷன் கிடைத்தது. இப்போது 90 பைசா கிடைக்கிறது. இதை 4 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும். மேலும் மேகாலயா உள்ளிட்ட சில மாநிலங்கள் மிகக் குறைந்த கமிஷனை தருகிறது. நாடு முழுதும் ஒரே கமிஷன் கொடுப்பது தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

 இளைய சகோதரர் பிரஹலாத் மோடி

இளைய சகோதரர் பிரஹலாத் மோடி

இந்த கூட்டமைப்பின் துணைத் தலைவராக உள்ளவர் பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரஹலாத் மோடி. இவர் குஜராத்தில் அகமதாபாத்தில் நியவிலை கடை ஒன்றை வைத்துள்ளார். பிரதமர் மோடிக்கு எதிராக அவரது சகோதரர் பிரஹலாத் மோடியே போராட்டத்தில் இறங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தனது சகோதரருக்கு எதிராகப் போராடவில்லை என்றும் இந்த அரசின் கொள்கைகளுக்கு எதிராகவே போராடுவதாகவும் பிரஹலாத் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

 விளக்கம்

விளக்கம்

இது குறித்து தி பிரிண்ட் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பிரஹலாத் மோடி அளித்த பேட்டியில், "யாராக இருந்தாலும் கேட்டால் தான் நமக்கு வேண்டியது கிடைக்கும். நான் ஒரு அமைப்பில் வேலை செய்கிறேன். எங்களுக்கு என்ன தேவையோ, அதைப் பெற நடவடிக்கை எடுக்கிறோம். அமைப்பு எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவைக் கொடுப்பேன். நான் எனது சகோதரர் மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தவில்லை. மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராகவே போராடுகிறேன்.

 பார்க்கவில்லை

பார்க்கவில்லை

நரேந்திர மோடி பிரதமரான பிறகு, கடந்த எட்டு ஆண்டுகளாக நாங்கள் சந்தித்து கொள்ளவில்லை. எங்கள் தாயாரைச் சந்திக்கும் போது கூட, குடும்பத்தைச் சேர்ந்த யாரும் அங்கு இல்லை என்பதை நீங்களே பார்த்து இருக்கலாம். அவர் 1970களிலேயே வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அன்றிலிருந்து அவர் இந்தியாவின் மகனாகவே இருக்கிறார். தேசமே அவர் குடும்பமாகவும் இருந்து வருகிறது. எனவே, இப்போது அவருடனான உறவு பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை. அவர் எப்போதும் தேசத்தின் நலனைப் பற்றியே அனைத்து இடங்களிலும் பேசுகிறார்" என்றார்.

 முதல்முறை இல்லை

முதல்முறை இல்லை

அதேநேரம் இவர் பிரதமர் மோடிக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது இது முதல்முறை இல்லை. ஏற்கனவே 2015இல், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, நியாய விலைக் கடை உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தினர். அதேபோல பிப்ரவரி 2021இல், உத்தரப்பிரதேச போலீசார் அவரது ஆதரவாளர்களைக் கைது செய்ததாகக் கூறி லக்னோ விமான நிலையத்தில் தர்ணா நடத்தினார். இந்தச் சூழலில் வரும் ஜூலை மாதத்திற்குள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் நாடு முழுவதும் இருக்கும் 15 லட்சம் ஊழியர்கள் உடன் போராட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய நியாய விலைக் கடை டீலர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+