'அவர்' செய்த ஒரே ஒரு ஃபோன் கால்..' 11 அமைச்சர்கள் வரிசையாக ராஜினாமா.. பின்னணியில் நடந்த பரபர சம்பவம்
டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தனிப்பட்ட முறையில் அமைச்சர்களை அழைத்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்தே 11 அமைச்சர்களும் ராஜினாமா செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சியை அமைத்தது முதல் மத்திய அமைச்சரவை மாற்றப்படாமல் இருந்தது. இருப்பினும், கொரோனா பரவலில் மத்திய அரசை பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.
இதையடுத்து இரண்டு ஆண்டுகளில் முதல்முறையாக மத்திய அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாட்டின் எல் முருகன் உள்ளிட்ட 43 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

அமைச்சரவை விரிவாக்கம்
அதற்கு முன், நேற்று காலை முதலே பல மூத்த முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். ஆறு கேபினெட் அமைச்சர்கள். தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் ஒருவர், இமை அமைச்சர்கள் 5 பேர் என மொத்தம் 11 பேர் நேற்று ராஜினாமா செய்திருந்தனர். முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை கர்நாடக ஆளுநராக அறிவிக்கப்பட்ட சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மூத்த அமைச்சர்கள் ராஜினாமா
மூத்த அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் போக்ரியால் உள்ளிட்டோரின் ராஜினாமா பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்நிலையில், அமைச்சர்கள் ராஜினாமா செய்தது தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதிக இளைஞர்களையும் கொண்ட அமைச்சரவை உருவாக்க வேண்டும் எனப் பிரதமர் முடிவு செய்திருந்ததால், வேறு வழியின்றி சில மூத்த அமைச்சர்களை நீக்க வேண்டியிருந்தது.

ஒரு போன் கால்
இந்த பொறுப்பு பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தனிப்பட்ட முறையில் அமைச்சர்களை அழைத்து ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்தே 11 அமைச்சர்களும் ராஜினாமா செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மோடியின் புதிய அமைச்சரவையில் புதிய இளைஞர்கள் பலருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
நாட்டில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டதைத் தடுக்க தவறிவிட்டதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. அதிலும் அந்த சமயத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறிய பல கருத்துகள் சர்ச்சையானது. கொரோனாவை தடுக்க தவறிய ஹர்ஷ் வர்தன் பதவி விலக வேண்டும் என அப்போதே பலரும் வலியுறுத்தினர்.

ஐடி விதிகள்
புதிய ஐடி விதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் மோதல் நிலவியது. அதைச் சரியாக நிர்வகிக்க முடியாததால் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரப் பிரதேசத்தில் யோகி அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சரியாகச் செயல்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியிருந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வாரும் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications