Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தடுத்து சோகம்.. அதிர்ச்சியில் பிரதமர் மோடி! நேற்று சகோதரர்.. இன்று தாய் -இருவருக்கு என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். நேற்றைய தினம் பிரதமர் மோடியின் சகோதரர் கர்நாடகாவில் குடும்பத்தோடு காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி தோற்றத்திலும் பிரதமரின் சாயலிலேயே இருப்பார். இவர் கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு செல்ல கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலத்திற்கு சென்றார்.

இந்த நிலையில் விலை உயர்ந்த பென்ஸ் காரில் நேற்று குடும்பத்தினருடன் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு அவர் பயணம் செய்துள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து அவர் காரில் திரும்பிக்கொண்டு இருந்தார்.

சகோதரருக்கு விபத்து

சகோதரருக்கு விபத்து

மைசூர் - நஞ்சன்கூடு நெடுஞ்சாலையில் இவரது கார் சென்றுகொண்டு இருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தரிகெட்டு ஓடிய காரில் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி இருக்கிறது. கார் வேகமாக மோதியதால் முன் சக்கரங்கள் கடுமையாக சேதமடைந்தன. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீட்டனர்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி


இதனை அடுத்து அவர்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மைசூர் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் அலுவலகத்திற்கும் அவர் தகவல் தெரிவித்தார்.

கர்நாடக அமைச்சர்

கர்நாடக அமைச்சர்

இந்த விபத்தில் பிரஹலாத் மோடிக்கு தாடையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவரது பேரனுக்கும், கார் ஓட்டுநருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ள மருத்துவமனைக்கு கர்நாடக அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் நேரில் சென்று உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.

பிரதமர் மோடியின் தாய்

பிரதமர் மோடியின் தாய்

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரருக்கு ஏற்பட்ட விபத்து அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி அவருக்கு கிடைத்து உள்ளது. 99 வயதான அவரது தாயார் ஹீராபென் மோடிக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அஹமதாபாத் மருத்துவமனை

அஹமதாபாத் மருத்துவமனை

அஹமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா இதயவியல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஹீராபென் உடல்நிலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் சீராக உள்ளார் என தெரிவித்து உள்ளனர். இதயவியல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அது சார்ந்த உடல் பிரச்சனைகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உடல்நிலை எப்படி உள்ளது?

உடல்நிலை எப்படி உள்ளது?

அவருக்கு என்ன பிரச்சனை என்பது தொடர்பான தகவலை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் தர்ஷனாபென் வகேலா மற்றும் கவுசிக் ஜெயின் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உள்ளார்கள்.

குஜராத் செல்லும் மோடி

குஜராத் செல்லும் மோடி

தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட தகவல் பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அங்கிருந்து குஜராத் மாநில அகமதாபாத்திற்கு விமானம் மூலம் வர உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைக்கு நேரில் சென்று அவர் தாயாரின் உடல்நலம் குறித்து விசாரிப்பார் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+