"இரு முறை சந்தித்தேன்.. அவரது அன்பை மறக்க முடியாது..!" ராணி எலிசபெத் மறைவு.. பிரதமர் மோடி இரங்கல்
டெல்லி: பிரிட்டன் ராணி எலிசபெத் காலமான நிலையில், அவருக்கு உலகெங்கும் உள்ள தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிரிட்டனில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்த இரண்டாம் மகாராணி எலிசபெத் இன்று உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
கடந்த ஆண்டு முதலே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த மகாராணி எலிசபெத், சில காலமாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்த ஓய்வெடுத்தே வந்தார்.

இந்தச் சூழலில் இரண்டாம் மகாராணி எலிசபெத் உயிரிழந்துள்ளார். இதற்கு பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி இரண்டாம் மகாராணி எலிசபெத்திற்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "2015 மற்றும் 2018இல் இங்கிலாந்து பயணத்தில் ராணி இரண்டாம் எலிசபெத்தைச் சந்தித்தேன். அது மறக்க முடியாத ஒன்று, அவரது அரவணைப்பையும் அன்பையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.
ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார். இதையெல்லாம் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications